மன்பதைக் கதைகள்
99
காலையில் எழுந்ததும் அந்தச் செங்கல்லை அகற்றிப் பார்த்தாள். ‘புதையலைக்கிளறி எடுக்க அவர்கள் முயன்றிருந்தனர். ஆனால் எடுத்துச் செல்ல அவர்களுக்கு நேரமில்லாதிருந்தது' - செங்கல் களைப் பாதி பிரிக்கு முன் இது அவளுக்குத் தெளிவாயிற்று. வியப்பும் மகிழ்ச்சியும் அவள் உள்ளம் நிரப்பின. வெளியே சென்றவர்கள் அதை அவளுக்கு எளிதாகக் காட்டியிருந்தனரே யன்றி எடுத்துச் செல்லவில்லை. சுவரைப் பாதி தகர்க்குமுன் ஏதோ அச்சத்தால் அவர்கள் தேடியதை எடுக்காமலே ஓடியிருத்தல் வேண்டும் என்று அவள் ஊகித்தாள். ஏனெனில் அதில் விலையுயர்ந்த அணிமணிகளும் பழைய பாண்டியர் பொற் காசுகளாக நூற்றுக்கணக்கான காசுகளும் இருந்தன.
அவள் கவலைகள் தீர்ந்தன. 'இனி பொன்னா விரையின் வறுமை மறைந்தது, அவன் துயரங்களும் அகன்றன' என்று அவள் எழுந்தாள். காசுகளை அவள் முன்தானையில் முடிச்சிட்டு இடுப்பில் செருகினாள். ஆடையணிமணிகளிலும் ஒரு சில எடுத்துக் கட்டினாள். அரையில் சுற்றியிருந்த கயிற்றை அவிழ்த்து அதைத் தோட்டத்திலிருந்த பசுவின் கழுத்தில் மாட்டினாள். பசுவின் கழுத்தில் ஈட்டப்படுவதற்கிருந்த வார்மணியையும் எடுத்துக் கட்டிக்கொண்டு புறப்பட்டாள்.
சிலம்பன் எழுதி வைத்த கடிதம் கண்டு, பைஞ்ஞீலியின் குடியிருப்பிலுள்ள அனைவரும் காலையிலேயே புறப்பட்டு மலையேறி இறங்கியிருந்தனர். பசுவின் கழுத்திலிருந்த மணியோசை கேட்டு அவர்கள் வியப்புற்றனர். பசுவுடன் பைஞ்ஞீலியைக் கண்டதுமே அனைவரும் அவளைக் கண்டு 'எங்கிருந்து வருகிறாய்?' என்று கேட்டனர். தாங்கள் செல்லப் புகும் இடத்துக்கே அவள் சென்று வந்தது கேட்டு வியப்பும் மகிழ்வும் அடைந்தனர். அவர்களில் ஒருவரேனும் அவள் முன்கூட்டிச் சென்றது பற்றிப் பொறாமைப்படவில்லை. அவள் அமைந்த குணத்திற்கு அவள் எவ்வளவு விரைவில் நற்பேறுகள் அடைந்தாலும் அவர்கட்கு மகிழ்ச்சியே. அவளும் பொற்காசு கிடைத்த விவரம் தவிர யாவும்கூறி அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் தெரிவித்து அனுப்பினாள்.
குடியிருப்பில் அனைவருக்குமே
அவரவர்களுக்கு
வேண்டிய ஆடுமாடுகள், ஏர்கலப்பைகள், தட்டுமுட்டுப் பொருள்கள், அணிமணிகள் கிடைத்தன.