பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. நயத்தக்க நாகரிகம்

நாகைப்பட்டினத்தில் வானவன் என்றோர் உயர்குடிச் செல்வன் இருந்தான். அவன் குடும்பம் பல தலைமுறைகளாகச் சோழப்பேரரசருடன் உறவு கொண்டிருந்ததனால் அவன் மட்டற்ற செருக்கு உடையவனாயிருந்தான். அத்துடன் அவன் எவருக்கும் உதவுவதில்லை. எவர் சிறப்புறுவதையும் காணப் பொறுப்பதில்லை. ஆனால் அதே நகரில் மீனவன் என்றொரு வணிகன் இருந்தான். அவன் செல்வக் குடியில் பிறக்கவில்லை. ஆயினும் தன் முயற்சியால் பெருஞ் செல்வனானான். அவன் கலங்கள் ஈழம், கடாரம், பழந்தீவங்கள் எங்கும் சென்று அரும்பொருள் கொணர்ந்தன. அவற்றை அவன் தன் பணியாளர்களுக்கும் உற்றார் உறவினருக்கும் நகரமக்களுக்கும் நலஞ்செய்வதிலேயே செலவழித்தான். சோலை வளம் பெருக்கும் சுனை அச்சோலையின் நிழலில் தானும் மேன்மேலும் நீர்வளம் சுரப்பது போல, அவன் வரையாது வழங்க வழங்க அவன் செல்வங்களும் வரையாது பொங்கின. இவற்றைக் கண்டு வானவன் பொருமினான்.

மக்கள் வானவனை மிகுதி விரும்பாவிட்டாலும், மன்னனவையிலும் மன்னர் பெருமன்னர் சூழலிலும் அவனுக்குச் செல்வாக்கு எல்லையற்றது. அச்சூழலில் அவன் மீனவன் மீது பல அவதூறுகளை மெல்லமெல்லப் பரப்பி வந்தான். கால இடச் சூழல்களிடையே இதை வலியுறுத்தவும் அவனுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. இச்சமயம் பாண்டி நாட்டு அரசுரிமைப் போர்கள் மூலம் சோழ நாட்டுக்கும் ஈழ நாட்டுக்கும் இடையே பெரும் பூசல் மூண்டது. இதனால் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையே நடைபெற்ற எல்லா வாணிகத் தொடர்புகளும் போக்குவரவுத் தொடர்புகளும் தடைப்பட்டன.ஆயினும் இந்தச் சூழலிடையிலும் எப்படியோ ஈழ நாட்டுத் துறைமுகத்திலிருந்து மீனவன்