அப்பாத்துரையம் - 39
102 || கப்பலொன்று சரக்குகளுடனும் அரும் பெரும் பொருட்குவை யுடனும் நாகைப்பட்டினத் துறைமுகத்தில் வந்திறங்கிற்று. மீனவன் ஈழ அரசனுக்கு ஒற்றனாயிருந்து பணியாற்றி வந்ததாலேயே அவனுக்கு இந்தச் சலுகை தரப்பட்டதென்று கூறி, வானவன் இச்செய்தியைப் பேரரச வட்டாரங்களில் திரித்துரைத்தான்.
ச
மீனவனைச் சோழப் பேரரசுத் தலைவர் சிறைப்படுத்தி, தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் வழக்கு மன்றத்தில் குற்றஞ்சாட்டினர். மீனவன் நிலைமையை நேர்மையுடனேயே விளக்கினான். அவன் கப்பல் போர் தொடங்கும் நெடுநாள் முன்னதாகவே ஈழம் சென்று, சரக்குகளுடனும் பொருட்குவை யுடனும் திரும்பிற்று. வழியில் கப்பலின் பல பகுதிகள் புயலினால் பழுதுபட்டதால், பாண்டி நாட்டுத் துறைமுகங்களில் சீர்திருத்தம் பெறுவதற்குச் சென்றிருந்தது. அது இக்காரணத்தினால் போர் தொடங்கியுள்ள சேர சோழ நாட்டுக்கு வர முடிந்தது.
வானவன் நீண்டநாள் செய்துவந்த அவதூறு காரணமாக, தலைவர்கள் இந்த விளக்கத்தைப் புனைசுருட்டு என்று கருதினர். ஆகவே அவனைத் தண்டனைக்காளாக்கினர். அவன் செல்வம் முழுவதும் பறிமுதலாயிற்று. அவனும் அவன் குடும்பத்தினரும் பேரரசின் எல்லைக்கப்பால் நாடு கடத்தப்பட்டனர். மீனவன் சேரநாட்டிலும் குந்தள நாட்டிலும் சுற்றித் திரிந்து பல அவதிகளுக்கு ஆளானான். ஆனால் இறுதியில் கோவாப் பட்டினத்திலுள்ள வெளிநாட்டு வாணிக நண்பனான நன்னிசோடன் அவனை வரவேற்றுத் தன்னுடனே வைத்துக் கொண்டான். அவன் நற்குணத்தாலும் திறமையாலும் விரைவில் நன்னிசோடன் செல்வமே பெருகியதனால், நன்னிசோடன் அவனைத் தன் பங்காளியாக்கிக் கொண்டதுடன், அவன் புதல்வனுக்கே தன் புதல்வியை மணமுடித்து, அவனைத் தன் குடும்பத்துடனேயே ஒன்றுபடுத்தினான்.
ஈ
சோழநாட்டினரையும் ஈழநாட்டினரையும் பாண்டிய நாட்டுப்போர் பல களங்களில் குருதிப் போராட வைத்தது. பல ஆண்டுகள் சென்று சோழர் வெற்றி எய்தினாலும், இடையே பல தறுவாய்களில் ஈழநாட்டார் கை மேலோங்கியிருந்தது. அச்சமயங்களில் சோழநாட்டாரும் அவர்களுக்கு ஆதரவா யிருந்த பல தமிழரும் படுகொலைக்காளாயினர். அத்துடன்