104
அப்பாத்துரையம் - 39
அவன் யார் என்று தோற்றவில்லை.
கேட்கக்கூட
இருவருக்கும்
இளைஞன் கண்கள் பின்னும் சுற்று முற்றும் ஓடின. அவன் தன் அன்னையைத் தேடினான். அன்னையின் உருவப் படமே அவன் கண்முன் இருந்தது. தண்பொருந்தம் நாள்தோறும் அணிந்த வெண்மலர் மாலை அதன் மீது துவண்டுகிடந்தது.
அவன் அந்தப் படத்தை எடுத்தான்.
'எங்கே என் தாய், எங்கே என் தாய், எங்கே என் அன்னை?' என்று அலறினான். தண்பொருந்தம் தன் துயரினும் விஞ்சிய அத்துயர்க் குரல் கேட்டுத் திரும்பினாள். ஆனால் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவளால் வாய்விட்டழவும் முடிய வில்லை. கண்களிலிருந்து மட்டும் வற்றியிருந்த ஊற்று மீண்டும் சுரந்தது. அவளழுகை கண்டு தங்கமணி அவளருகே வந்து 'தண்பொருந்தம்! நீ ஏன் இப்படிப் போனாய்? அம்மா எங்கே' என்றான்.
தண்பொருந்தத்துக்கு அவன் அண்ணன் என்பது விளங்கி விட்டது. புதிய உயிருடன் புதிய துயரும் பீறிட்டெழுந்தன. 'அண்ணா, அண்ணா! நீ இல்லாமல் அப்பாவும் நானும்தான் உயிரு டன் இருக்கிறோம். அம்மா அப்போதே போய்விட்டாள். பாவம் நீ அடுத்த உலகில் இருக்கிறாய் என்று தேடப் போனாள். நீ இங்கிருக்கிறாய்; இத்தனை ஆண்டு கழித்தாவது வருவாய் என்று தெரிந்தால், அவள் போயிருக்கமாட்டாளே' என்று தேம்பித் தேம்பி அழுதாள்.
வானவன், ஏதோ சிந்தனைக் கோட்டைகளிடையே தவழ்ந்திருந்தவன் இந்தக் காட்சியைக் கண்டு திகைத்தான். தங்கமணியின் முகத்தை ருகையாலும் ஏந்திக்கொண்டு “நீ யார்? என் இறந்துபோன மகன் பற்றிய செய்தியா கொண்டு வந்திருக்கிறாய்?" என்றான்.
66
“அப்பா, நான் இறந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும் அப்பா! இங்கே வந்து அம்மா மறைவையாவது கேட்க நேராதிருந்திருக்கும். ஆனாலும், தங்கையை இந்நிலையில் நான் விட்டுச் சென்றிருக்கப்படாது, நீங்களும்..."