பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

66

105

"ஆ, நீயா தங்கமணி, நீயா என் மகன்? எப்படியப்பா வந்தாய்? எங்கிருந்தாய்? தெய்வமே, என் மனைவியைக் கைக் காண்டாய், மகனைக் கொடுத்தாய்? நான் உன்னை நோக கவா, வாழ்த்தவா? ஏன் இந்தக் கூத்து அப்பனே! பிள்ளையைக் காணாமல் அவள் இறந்தாளே!" என்று புலம்பினான்.

"அப்பா, இங்கே அம்மையைக் காக்க ஒரு தெய்வம் இல்லாமலா போயிற்று? ஆனால் கோவாப் பட்டினத்தில் ஒரு தெய்வம் இருக்கிறது. தமிழனுக்குத் தமிழன் என்ற ஓர் உறவன்றி, அந்தப் பெருந்தகைக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது. ஆனால் எனக்காக அவர் ஏனோ பணம் செலவு செய்து, வருத்தங்களும் மேற்கொண்டு அன்பையும் சொரிந்து, உங்களிடமே என்னை அனுப்பியிருக்கிறார்.சிறைப்பட்டு அடிமை யாக்கப்பட்ட என்னை அடிமையாகவே வாங்கி, விடுதலை தந்து மகனாக நடத்தி உங்களிடம் அனுப்பியிருக்கிறார். அத்தகைய தெய்வங்கள் நம் தமிழ்நாட்டிலும் இருந்தால் நம் துன்பங்கள்கூட இன்பமாய் இருக்கும் அப்பா” என்றான் தங்கமணி.

“யார் அப்பா, அவர்? விவரமாகச் சொல்லு! உன் உயிரைத் தந்த அவருக்கு நான் என்ன செய்தாலும் தகும்" என்றான்

வானவன்.

“அவர் யார் என்று எனக்குத் தெரியாதப்பா! அங்குள்ள ஒரு பெரு வணிகர். பெயர் மீனவர்."

“மீனவனா, ஆ!” என்று சாய்ந்தான் வானவன்.

தங்கமணி கவலையுடன் அவனை அணைத்தெடுத்து முகத்தில் நீர் தெளித்து ஆற்றினான். பின், அவரை “உங்களுக்குத் தெரியுமா அப்பா? அவர் பெயர் கேட்டவுடன் இவ்வளவு சோர்வானேன்? சரி, அவரே உங்களுக்கு என்னிடமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார், தர மறுத்துவிட்டேன்” என்று ஒரு உறையையும் சுட்டிக்காட்டினான்.

வானவன் உறையை அவசர அவசரமாகக் கிழித்து வாசித்தான். "இந்தக் கடிதத்துடன் உம் குடிக்கு ஒரே கொழுந்தான உங்கள் புதல்வன் தங்கமணி உங்களிடம் வந்து சேர்ந்திருப்பான். பெற்ற தந்தை என்ற உங்கள் உரிமை பெரிதாதலினாலேயே அவனை உங்களிடம் அனுப்பியுள்ளேன்.