110 ||____.
அப்பாத்துரையம் - 39
மாரியப்பனுக்கு வீட்டில் சலுகை மிகுதி. அவன் என்ன செய்தாலும், செல்லாயி அவனைக் கண்டிக்க மாட்டாள். செங்காவியோ அவன் சொன்னபடி நடப்பாள். அவளுக்கு அவனே வழிபடு தெய்வமாகவும் இருந்தான். வேறு தட்டிக் கேட்பவர்கள் யாரும் கிடையாது.எனவே அவன் வீட்டில் அவன் வைத்தது சட்டமாயிருந்தது.
ஊரிலும் பள்ளியிலும்கூட, எல்லோரும் மாரியப்பனுக்கு முதல் மதிப்புக் கொடுத்தார்கள்.
இந்த நிலையில் அவன் பள்ளிப் படிப்பு முழுவெற்றி காணவில்லை. பத்தாம் வகுப்பை அவன் எட்டிப் பார்க்கவில்லை. அதற்கு முன், பள்ளிக்கு அவன் முற்றுப்புள்ளி வைத்தான்.
அவன் ஒடுங்கிய, எலும்பான உடலுடையவன். ஆனாலும் அவனுக்கு இயற்கை உரம் மிகுதி. அத்துடன் அவன் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தான். சிலம்பம், வாள் வீச்சு, மற்போர், வில் வித்தை, குத்துச்சண்டை முதலியவற்றிலும் அவன் தேர்ச்சி பெற்றிருந்தான். இந்த வீரக் கேளிக்கைகளால் அவன் உரம் பெருக்கமடைந்தது.
இயல்பாக அவன் எல்லாரிடமும் அன்புடையவன்.ஆனால் அவன் இறுமாப்பு இந்த அன்பை மறைத்தது. பொதுவாக, அவன் மற்றப் பிள்ளைகளுடன் தாராளமாக விளையாடுவது கிடையாது. விளையாடும்போதும், எதிலும் முதலிடத்தை விடமாட்டான். முதலிடத்தைப் பெறவும் அதைப் பேணவும், அவன் அரும்பாடுபட்டான். இத்துறையில் மற்ற எல்லாரையும் விட, அவன் விடாமுயற்சியுடனும் மூர்க்கமாகவும் உழைத்தான்.
மரங்களின் உச்சாணிக் கிளைகளை அவன் எட்டிப்பிடித்து ஏறுவான். எவரும் அணுக அஞ்சும் மலைக்குவடுகளில் அவன் தாவுவான். முட்காடுகளில் திரிந்து வேட்டையாடுவான். ஆறு குளங்களின் நிலைகாணா ஆழ்கசங்கள் அவனுக்கு விளையாட் டிடங்கள். வேகமான நீரோட்டங்கள், சுழிகள் ஆகியவற்றில் அவன் துணிந்து பழகுவான். எல்லாரையும் தாண்டி உச்சநிலை அடைவதிலேயே அவன் ஆர்வம் முனைப்பாய் இருந்தது.
பள்ளிப்படிப்பில் அவன் கருத்துச் செலுத்தவில்லை. பாடங்களிலும் பள்ளித் தேர்வுகளிலும் அவனுக்கு அக்கரை