பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

113

அவர்களை அவன் கடுமையாகத் தாக்கத் தயங்க மாட்டான். சில சமயம் அவன் அவர்களை கூடத்திலிருந்தே

துரத்தியடிப்பான்.

நாடகக்

மொத்தத்தில், அவனுடன் நடிக்க முன்வருவதற்கு எவரும் அஞ்சினார்கள். ஏற்கெனவே நடித்தவர்களும் அவன் சீற்றத்துக்கு அஞ்சி ஒவ்வொருவராக நழுவி வெளியேறினார்கள். ஆனால் இவற்றால் மாரியப்பன் ஒருசிறிதும் சோர்வடையவில்லை. மேடை வெறும் மேடையான பின், அவன் நாடகத்தை நடிப்புக் கச்சேரி ஆக்கினான். எல்லா நடிப்புப் பகுதிகளையும் அவன் தானே திறம்பட நடித்துக் காட்டினான்.

முன்பு அவன் வாசிப்பு வாசிப்பாயில்லை. அது போலவே இப்போது அவன் நடிப்பு நடிப்பாயில்லை. அது கிட்டத்தட்ட நேரிடையான நிகழ்ச்சியாகத் தொடங்கிற்று. அவன் கற்பனையாற்றல் நடிப்பெல்லை தாண்டி வளர்ந்தது. சில சமயம்.

று

ஒருநாள் அவன் மேடையிலிருந்து தட தடவென்று இறங்கினான். மக்கள் நடுவே வந்து நின்று பேசினான். “என் வானர வீரர்களே! ஏன் என்னையே பார்த்துக் கொண்டு சும்மா நிற்கிறீர்கள்? போங்கள்! போய், மலைகளைப் பெயர்த்தெடுத்து, அணை கட்டுங்கள்!” என்று அவன் வீறிட்டு முழங்கினான்.

மற்றும் ஒருநாள் அவன் வேறொரு பாணியில் தொடங்கினான்.“அட அரக்கப்பதர்களே! என்னை என்ன என்று நினைத்தீர்கள்? இதோ பாருங்கள்!” என்று ஆர்ப்பரித்தான். அச்சமயம் வாளைச் சுழற்றுவதுபோல், அவன் கைகால்களைச் சுழற்றினான். அவன் கண்கள் உருண்டு புரண்டு கனற் பொறிகளைக் கக்கின.

நாடகம் நடிப்புக் கச்சேரி ஆனதுபோலவே, நடிப்புக் கச்சேரி ஆளற்ற நடிப்பு அரங்கமாயிற்று. இறுதியில் அவன் மேடையைக் கைவிட்டான். ஆயினும் நடிப்பை அவன் என்றும் கைவிடவில்லை. அவன் வாழ்க்கையே அது முதல் ஒரு நடிப்பாயிற்று - வெறி நடிப்பாயிற்று!

ஒவ்வொரு நாள் அவன் உலகளந்த பெருமாளாக நடிப்பான். நூலகம் நிலவுலகமாகும். அதன் மாடி வானுலகாகும். கால் வைக்கும் கோக்காலியே மாவலியின் தலை ஆகும். அவன்