பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(114 ||.

அப்பாத்துரையம் - 39

அதன்மீது ஏறி நிற்பான். அடி நிலம் புகும்படி அதை அழுத்தி மிதிப்பான்!

சில சமயம் ஊர்வெளியில் உள்ள எருக்கஞ் செடிகள் மீது அவன் கழிகொண்டு வாள் நடத்துவான். வேறு சில சமயம் ஆவாரஞ் செடிகள் மீதும் பாலை உடை மரங்கள் மீதும் தடிகொண்டு மூர்க்கமாகத் தாக்குவான். இச்சமயங்களில் அவனே வாள் விசயன் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும்! பால் வடியும் எருக்குகள் குருதி சிந்தும் மனித உடல்கள் என்பதையும் பலர் அறியமாட்டார்கள்!

பாலை உடைமுட்கள் கீறி, அவன் உடலில் குருதி தோயும், காயம்பட்ட வீரனின் பெருமிதத் தோற்றத்துடன் அவன் வீடு திரும்புவான்.

அவன் போக்குக் கண்டு, அவனைச் செல்லமாக வளர்த்த செல்லாயி கண்ணீர் வடித்தாள். அவன்மீது உயிரையே வைத்திருந்த செங்காவி கண்கலங்கினாள். ஆனால் அவர்கள் அறிவுரைகள், அன்புரைகள் அவன் செவியில் ஏறவில்லை. வேறு வகையான ஊக்குரைகள் அவனுக்கு இப்போது தேவைப்பட்டன. அவை அவனுக்கு மிகவும் எளிதாகவும் கிடைத்தன.

அவன் நடிப்புக் காலத்தில், அருகே நின்று ஊக்கிய சில தோழர்கள் இருந்தார்கள். அவர்கள் அவனை வந்து அடுத்தார்கள். அவர்கள் எவரும் அவனை மாரியப்பன் என்று அழைப்பதில்லை. மருதூர் மாணிக்கம் என்று செல்லமாக அழைத்தார்கள். அவர்கள் இப்போது அவன் நடிப்பைப் புகழவில்லை. அவனையே புகழ்ந்தார்கள். அவன் வீரத்தைப் பாராட்டினார்கள். புகழப் புகழ அவன் மகிழ்ந்து ஆர்ப்பரித்தான். அவன் மகிழ புகழ்ச்சி பெருகிற்று. அவர்கள் அவன் சீடகோடிகள் ஆயினர். அவன் புதுவீரப்போக்கை வளர்த்தனர். பின் அவர்கள் அவன் பக்தர்கள் ஆயினர். அவனை அர்ச்சனை செய்தார்கள்.

"இராமனையும் விசயனையும்விட, நீயே பெரிய வில்வீரன். மாருதியையும் வீமனையும்விட, நீயே பெரிய மல்வீரன்” என்று அவர்கள் தொடங்கினார்கள். "விக்கிரமாதித்தன் வீர அரசனாகப் பிறந்தான். நீ வீரத்தால் அரசனாகப் போகிறாய்? தேசிங்குராசன் துடுக்கான ஒரு சிற்றரசன். நீ சிற்றரசரை நடுங்க