பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

115

வைக்கும் பேரரசனாகப் போகிறாய்" என்று அவர்கள் புகழ் மாலையை உருவி நீட்டினார்கள்.

66

'உன் புகழ் பரந்தபின், அவர்கள் புகழ் என்ன ஆகும்! அதனால்தான் அவர்கள் முந்திப் பிறந்துவிட்டு, முந்தி மறைந்து கொண்டார்கள். உன் வீரம் அவர்களுக்கு வருமா?” என்று அவன் பெருமையை நீட்டி அளந்தார்கள்.

கதையைக் கண்முன் நடக்கும் நிகழ்ச்சியாகக் கருதுபவன் அவன். இப்போது சீடர் புகழ்ச்சிகள் எல்லாம் அவனுக்கு முற்றிலும் மெய்யுரைகளாகவே தோன்றின. அவன் கற்பனை யாற்றல் அவற்றின்மீது மேலும் கற்பனைக் கோட்டைகள் எழுப்பின. அதன் பின் அவர்கள் புகழ்ச்சிகள் அவனை மகிழ்விக்கவில்லை.புகழ்ந்தவர்கள் மீதே அவன் சீறி விழுந்தான்.

"இராமனென்ன? விசயனென்ன? அவர்கள் எம்மட்டு? அவர்கள் அனைவரும் என் முன்னோடிகள் மட்டுமே! அவர்கள் அரைகுறை அவதாரங்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? கண்ணன்கூட அவர்கள் குறையை நிரப்பப் போதவில்லை. அவனே சாபத்துக்கு ஆளானான். ஒரு வேடனால் கொல்லப்பட்டான். நீங்கள் பாகவதபுராணத்தைப் படித்துப் பாருங்கள்! கற்கி பிறப்பார், அவர் தான் முழு அவதாரம் என்றல்லவா அந்தப் புராணம் கூறுகிறது?" என்று அவன் முழக்கமிட்டான்,

"ஆகா! நீங்கள்தான் கற்கி! இது தெரியாமல் போனோமே? மன்னியுங்கள்!” என்று ஒரு சீடன் கூறினான். அவன் வாக்கு, உலர்ந்த வைக்கோற்போரில் பட்ட தீப்பொறியாயிற்று. எல்லாச் சீடரிடமும் புதிய பக்தி தோன்றிற்று. 'நீ' என்ற சொல் மறைந்தது. ‘நீங்கள்’ ‘தேவரீர்' என்ற புதுச்சொற்கள் எழுந்தன.

"ஆகாகா! நீங்கள் தான் கற்கி என்று இப்போது தான் உணர்ந்தோம். பழைய பாரதத்தைப் புது பாரதமாக்க வந்த பாரத வீரர் நீங்கள்தான் என்பதைக் கண்டு கொண்டோம்! வாழ்க கற்கி! வெல்க கற்கியின் வருங்கால வீரம்!" என்று அவர்கள் ஆரவாரித்தார்கள்.

அதுமுதல் சீடகோடிகள் அவனைப் புகழ்வதில்