116 ||
அப்பாத்துரையம் - 39
ஒருவருக்கொருவர் போட்டியிட்டார்கள். அவனுக்குப் பல புகழ்ப் பெயர்களைச் சூட்டினார்கள். அவற்றை அவனுக்குரிய விருதுப் பெயர்களாக்கினார்கள். அவற்றால் அவனை ஓயாமல் அர்ச்சனை செய்தார்கள்.
"கண்கண்ட கற்கி, கலியுகராமன்! விசயாதி விசயன், நவகோடி விக்கிரமாதித்தன்! திரிலோக தேசிங்குராசன், மன்னாதி மன்னன்! வீர சூரியன், வீர சூரமார்த்தாண்டன் மருதூர் மாணிக்கம், மாளாத மாவலி வாணராயன்!" இந்தப் படியாக, அவர்கள் அவனைப் பலவாறு பரவிப் பாராட்டத் தொடங்கினார்கள்.
உடுக்கையை உக்கிரமாக அடிக்க அடிக்க, வெறியாட்டுத் தெய்வம் ஓங்கி எழுந்தாடும். அதுபோல, பாராட்டுக்கள் உயர உயர, மாரியப்பன் வீரதீரப் பண்புகளும் உயர்ந்தன. அவற்றால் செல்வ மருதூர் முழங்கிற்று. அருகிலுள்ள சிற்றூர்களில் கூட அதன் ஒலி எதிரொலிகள் கேட்கத் தொடங்கின. செல்வமருதூர் வீரமருதூராக விளங்கத் தொடங்கிற்று.