மாரியப்பன்
2. இளவரசி
காலையில்
ஆறு மணிக்குத்தான்
எழுந்திருப்பது வழக்கம். அன்று மணி ஐந்துதான் ஆயிற்று. அவன் இன்னும் அரை தூக்கத்திலேயே இருந்தான். அச்சமயத்தில் இசை ஒலிகள் அவன் காதுகளில் வந்து தவழ்ந்தன. அவை திருவாசக, திருவாய்மொழிப் பண்கள் போன்றிருந்தன.
அவன் சிறிது புரண்டு படுத்தான்.
ஓசை அவனை அணுகி வந்தது. அவன் செவிகளைத் துளைத்தது. அவன் சற்று நெளிந்து எழுந்தான்.
பாடிக்கொண்டே ஒரு கூட்டம் அவன் அறைக்குள் வந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குள் அறை நிறைந்து விட்டது.
அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். கண்களையும் காதுகளையும் துடைத்துக்கொண்டான்.
‘ஆம்! அது கனவல்ல. நனவே!'
அவர்கள் அவன் சீடகோடிகள் போலவே இருந்தார்கள். ஆனால் அவர்கள் பூச்சூடிப் பெருமிதத்துடன் வந்தார்கள். அவர்களிடம் இசைக்கருவிகள் இருந்தன. இசைக்குழு ஒன்று பாடிற்று.பாட்டின் மெட்டுகள் தான் திருவாசக திருவாய்மொழி மெட்டுக்கள். அவை புகழ்ந்தது சிவபெருமானையோ, திருமாலையோ அல்ல. மாரியப்பன் விருதுப் பெயர்களையே அவர்கள் நாமாவளி ஆக்கியிருந்தார்கள். அதைப் அப்பண்களில் இசைத்துப் பாடினார்கள். பாட்டில் மருதூர் மாணிக்கம் என்ற அன்புப் பட்டந்தான், ‘பாரத வீரன்' என்ற வீரப் புதுத் தொடர் அடிக்கடிகாதுகளில் முழங்கிற்று.
“பாரத வீரன் வாழ்க! அவர் வீரம் வெல்க! கண்கண்ட கற்கிப் பெருமான் வாழிய! எட்டு திக்கும் அவர் வெற்றி