மருதூர் மாணிக்கம்
119
தமிழகத்தின் சார்பில் பொதுவாகவும் தமிழகப் பெண்கள் சார்பில் சிறப்பாகவும், நான் தங்களுக்கு வாழ்த்துக்கூறிப் பாராட்டுகிறேன்.
“தங்களுக்கு ஏற்கெனவே மக்கள் அளித்துள்ள விருதுகள் பல தங்களுக்கே உரிய தனிப்பெரு விருதாக, அவற்றுடன் ‘பாரத வீரன்' என்ற சிறப்புப் பட்டத்தையும் அளிக்கிறோம். தமிழகப் பெண்களின் சார்பிலும், என் சார்பிலும் தங்களுக்கு வீர இளவரசுரிமையும் அளிக்கிறோம். அதற்குரிய செங்கோலும் வீர மணிமுடியும் இவ்வீரப்பட்டத்துடன் வழங்கி ஊக்கவே, இன்று நான் என் குடிபடைகளுடன் வந்தேன்.
"இனி ஓராண்டு தங்கள் வீர வெற்றிகளைக் காதாரக் கேட்டவண்ணம் நான் கன்னி மாடத்தில் இருப்பேன். அதன்பின் தங்கள் வெற்றிப் புகழுலக ஆட்சியுடன், என் நிலவுலக ஆட்சியையும் என்னையும் ஏற்று, வீரசிங்காதனம்
அமர்வீர்களாக!”
“பாரத வீரன்” என்ற புதுப்பட்டம் அவன் உள்ளத்தின் வியப்பையும் மலைப்பையும் அகற்றின. மகிழ்ச்சியும் இறும்பூதும் பெருமிதவீறும் அவன் உள்ளத்தில் வந்து புகுந்தன. ஒரு நொடியில் அவன் ஓர் இளவரசியை மனமுவந்து ஏற்கும் இளவரசனானான்.
66
“அழகிற் சிறந்த அரசிளஞ் செல்வியே! உன் அன்பிற்கும், தமிழகப் பெண்மையின் பாராட்டுக்கும் நன்றி. நீ அளித்த ‘பாரத வீரன்' என்ற பட்டத்தை மனமுவந்து ஏற்கிறோம். அதுவே இன்று முதல் எம் சிறப்புப் பெயர் ஆவதாக!
"நீ அளித்த முடி, செங்கோல் ஆகிய இளவரசுச் சின்னங்களையும் என் புதுப் பொறுப்புக்கு அறிகுறிகளாக ஒப்புக் கொள்கிறேன். அவற்றுடன் தமிழகப் பெண்களின் சார்பில், நீ இடும் அன்புக்கட்டளைகளை ஏற்று வீரச் செயல்களால் உன் புகழ் பெருக்குவேன். நீ கூறியபடியே உன்னுடன் பொன் அரியாதனத்தில் அமரும் நாளை விரைந்து அவாவுவேன்.”
அவன் பேச்சின் பெருமிதத் தோற்றம் கண்டு அனைவரும் வியந்தனர். இளவரசி நாணிக்கோணி நுடங்கி நின்றாள். அவள் முகத்தில் புன்முறுவல் ஒளிபூத்தது.