122
அப்பாத்துரையம் - 39
அவன் எண்ணங்கள் துணிவாயின. துணிவு செயலாகுமுன் துடிப்பாயின. அத்துடிப்புடன் அவன் கால்கள் அறையின் முழு நீளமும் தாண்டி அளந்தன.
கருத்துடன் கருத்து அவன் உள்ளத்தில் மோதின. ஒவ்வொரு புதிய கருத்தின் போதும், அவன் கால்கள் நடையை நிறுத்தின. உடல் நிமிர்ந்தது. தலை உயர்ந்தது. கைகள் ஒன்றை ஒன்று 'பட், பட்' என்று சென்று தாக்கின.
அவன் கனவுக் கோட்டைகளின் மகிழ்ச்சியிடையே, ஒரே ஒரு குறைதான் அவனுக்குத் தென்பட்டது.
66
சி
'இளவரசி என்னை இவ்வளவு மதித்து, இவ்வளவு நேசித்துப் பெருமைப்படுத்தினாளே! அத்தகையவள் பெயரோ, நாடோ, மற்ற விவரங்களோ கேட்காமல் போய்விட்டேனே! எனக்கு வீரம் இருந்து என்ன பயன்? முழு முட்டாளாகவல்லவா அமைந்துவிட்டேன்!" என்று அவன் தன்னையே நொந்து
கொண்டான்.
“அவள் பெயர் என்னவோ?"
66
“அவள் ஊர் என்னவோ?”
“அவள் எந்த நாட்டரசன் புதல்வியோ?”
66
'அவளை மணந்த பின்னால், எந்த நாட்டாட்சி எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறதோ?”
இந்தக் கேள்விகள் அவன் சிந்தனையைப் புதியதொரு திசையில் செலுத்தின. முடிவில்லாத அச்சிந்தனைகளின் சுழற்சியிலேயே அவன் சுழன்று வட்டமிட்டான்.
மருதூர்
இளவரசி உண்மையில் யார்? இதை மாணிக்கமாகிய பாரதவீரன் என்றும் அறிய முடியவில்லை. அறியவில்லை! அறிந்தால் அன்றே அவன் கனவுக் கோட்டைகள் தகர்ந்து போயிருக்கும். அவன் சீரிய கற்பனை உள்ளம் அதை அவன் என்றும் அறியாமல் காத்தது. ஆனால் சீடகோடிகள் அனைவருக்கும் அது யார் என்பது தெரியும்? ஏனென்றால் அதுவே அவர்கள் வகுத்த திட்டத்தின் இரகசியம்.