பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

று

125

வீரர்களுக்காக இருக்கைகள் போடப்படவில்லை. ஆனாலும் அந்தக் குறையைப் பலர் தாமே முயன்று சரிசெய்து கொண்டார்கள். தத்தம் கைக் கெட்டிய மொட்டை இருக்கைகளை அவர்கள் கொண்டுவந்து உட்கார்ந்தார்கள். எத்தகைய இருக்கைகளும் கிடைக்காதவர்கள் மரப்பெட்டி களைக் கவித்து உட்கார்ந்தார்கள். சிலர் செம்பு மண் குடங்களை யும், பானைகளையும் கொண்டு வந்தார்கள். அவற்றைக் கவிழ்த்து வைத்து அவற்றின்மீது வாகாக உட்கார்ந்தார்கள்.

ஒரே ஒரு குறும்பன் மட்டும், பாரத வீரன் அறியாமல், பாரத இராமாயணப் புத்தகங்களை எடுத்து அடுக்கினான். அவற்றின் மீது ஒரு துணியிட்டு அதை இருக்கையாக்கிக் கொண்டிருந்தான்!

கொலு மன்றத்தின் காவலர்களாக நின்றவர்கள், உயிருள்ள வீரர்களல்ல.நாடகமேடைகளிலுள்ள சில அட்டை உருவங்களே அந்தந்த இடங்களில் அழகாக நிறுத்தப்பட்டிருந்தன. காற்றில் அவை ஆடி ஆடி அலைந்ததனால், அவையும் அவ்வப்போது உயிருள்ள உருவங்களாகத் தோன்றின.

நாடக மேடையில் அரசர் அணியும் ஆடை அணி மணிகளைப் பாரத வீரன் அன்று அணிந்திருந்தான். கூட்டத்திடையே அவன் பெருமிதமாக நடந்து வந்தான். மக்கள் இருபுறமும் வழிவிட்டார்கள். "வாழ்க பாரதவீரன், வெல்க பாரத வீரன் கொற்றம்” என்று எல்லோரும் ஆரவாரம் செய்தார்கள். பாரத வீரன் அரியணைமீது ஏறி அமர்ந்தான். உடனே, "வெற்றி, வெற்றி! பாரத வீரனுக்கு எட்டுத் திசையிலும் வெற்றி, வெற்றி!” என்ற குரல்கள் நூலக மாடிவரை எழுந்து அதிர்ந்தன.

நூலகத்தின் வெளி வாயிலில் நீண்ட கழிக்கோலுடன் ஓர் உருவம் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தது. அது உயிரற்ற உருவங்களில் ஒன்று என்றுதான் எல்லாரும் எண்ணினார்கள். ஆனால் உள்ளே அமைதி ஏற்பட்டதும், அது திடீரென்று கோலை உயர்த்திற்று. குரலை எழுப்பிற்று!

“வெற்றி வீரன்பாரத வீரன் கொலுமண்டபம் கூடிற்று!