பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

அப்பாத்துரையம் - 39

வீரதீர விக்கிரமா தித்தன் கொலுமண்டபம் கூடிற்று!!”

என்ற குரல் அமைதியைத் துளைத்து, மும்முறை முழங்கிற்று.

வாயில் காவலன் உயிரற்ற உருவமல்ல, உயிருள்ள வீரனே என்பதையும் அது முழக்கமிட்டுத் தெரிவித்தது.

பாரத வீரன் அரியணையில் அமர்ந்தபடியே, தலை நிமிர்ந்து பேசினான்.

"அமைச்சர்களே, படைத்தலைவர்களே, வீரர்களே!

“உங்கள் தலைவன் என்கிற உரிமை எனக்கு உண்டு. உங்கள் தலைவியாக என் அருகே பட உருவில் அமர்ந்திருக்கும் இளவரசியின் துணைவன் என்ற உரிமையும் எனக்கு உண்டு. இரண்டு உரிமையாலும் பேச விரும்புகிறேன்.

“என் வெற்றியுலாவுக்கான திட்டங்கள், ஏற்பாடுகள் செய்ய நீங்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். அதற்கான ஆய்வுரைகள், அறிவுரைகள், கருத்துரைகள் வழங்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். முறைப்படி அமைச்சர்கள் தொடங்கட்டும்” என்று கூறி அமைந்தான்.

அமைச்சர்கள், படைத்தலைவர்கள் ஒவ்வொருவராகப் பேசினர். பின் வீரர்களில் பலர் எழுந்து பேசினர். பேச்சு எதிர் பேச்சு, வாத எதிர்வாதம், திட்ட எதிர் திட்டமாகக் கொலுமன்றம். ஒரு மாநாடுபோல் வளர்ந்தது. என்றுமில்லாத இந்த ஆரவாரம் கண்டு, செல்லாயியும் செங்காவியும் ஓடி வந்தார்கள். ஆனால் கழிக்கோல் ஏந்திய காவலன் அவர்கள் உள்ளே வராமல் தடுத்து நிறுத்தினான்.

"இது என்ன கும்மாளம்? இப்படியும் பணத்தை வீணாக்கி நாடகம் நடிக்கலாமா? பைத்தியக்காரக் கூத்தாயிருக்கிறதே!" என்று அவர்கள் கூக்குரலிட்டார்கள்.

வீரர்களில் சிலர் எழுந்து சென்றார்கள். "பாரத வீரன் பெருமையறியாமல் இப்படிப் பேசாதீர்கள்!” என்று அவர்கள் அப்பெண்மணிகளுக்குப் புத்திமதி சொன்னார்கள்.