பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

129

இரண்டுக்கும் பொது உரிமையான ஆடையணிமணிகள் தகுதியுடையவை என்பதிலும் தடையில்லை. ஆனால் நாடகக் கொட்டகையில் இளவரசன் இளவரசனல்ல, படைத்தலைவன் படைத்தலைவனல்ல. அவர்கள் அணியும் வாள் பொய்வாள். கவசம் பொய்க்கவசம். இவை நாடகத்துக்குச் சரியாய் இருக்கலாம்.நாட்டகத்து மெய் வாழ்வுக்கு எப்படிப் பொருந்தும்?

“நான் பொய் வாளோ, பொய்க் கவசமோ பூண்டு என்ன பயன்? நான் பொய் வீரன் அல்லவே? அந்தப் பொய் வாள் மெய்வீரர் கவசங்களைக் கிழிக்குமா? அந்தப் பொய்க் கவசம் மெய் வீரர் வாள்களிலிருந்து என்னைக் காக்குமா?

“நம் செயற்குழு ஒரு நாடகச் செயற்குழுவல்ல. ஒரு மெய் வீரன் செயற்குழு என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். மெய் வீரன் செயற்குழு இவற்றைச் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

"மேலும் நம் நாடக மேடைக் கதைகள் பழங்காலத்து கதைகள். அதன் நடிக வீரர்களுக்கு இராமன் காலத்து வில்லும், விசயன் காலத்து அம்பும் போதுமாயிருக்கலாம். ஆனால் நான்

க்கால வீரனாயிற்றே எனக்கு அவை எப்படிப் போதும்? இக்கால வீரரிடம் வெடிப்படை இருக்குமே! வில்லும் அம்பும் வாளும் வெடிப்படை முன் என்ன செய்யமுடியும்?

"நம் பாஞ்சாலங்குறிச்சி முன்னோர் உலகறிந்த வீரர்கள். ஆனாலும் வெடிப்படையில் கருத்துச் செலுத்தாததனால்தானே, நாம் வெள்ளையனுக்கு நம் நாட்டைப் பறிகொடுக்க நேர்ந்தது? இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்”

நாடக மேடை கடந்த, நாடு கடந்த பாரத வீரன் அறிவு கண்டு செயற்குழுவினர் நடுங்கினார்கள். சிறிது நேரம் எவரும் வாய்திறக்க அஞ்சினார்கள். உண்மையான வாள் கவசம், வெடிப்படை - இவற்றுக்கு எங்கே போவது? என்ன செய்வது? க்கேள்விகளுக்கு விடைகாண மாட்டாமல் அவர்கள் விழித்தார்கள்.

செயற்குழுவின் சிக்கல்நிலை எவ்வளவு நேரம் நீடிக்குமோ என்ற கவலை தலைவனைப் பிடித்தாட்டிற்று.

இச்சமயம் சித்தேசி எழுந்தான். சிக்கல் தீரவகை ஏற்படலாம் என்ற நம்பிக்கை தலைவன் முகத்தில் தென்பட்டது.