130
66
அப்பாத்துரையம் - 39
"ஏன்! கொல்லனிடம் இப்போதே செல்வோமே! வில், வாள், வெடிப்படை ஆகியவற்றைச் செய்து தருவதற்கான கட்டளை கொடுக்கலாமே!” என்றான் அவன்.
குழுவினர் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பாரத வீரன் முகம்கூட அமைதியாக இருந்தது. ஆனால் குளத்தூரான் முகத்தில் புத்தொளி வீசிற்று. அவன் புன்னகையுடன் மெல்ல எழுந்தான்.
66
"அன்பர்களே! பாரத வீரன் இக்கால வீரன்தான். ஆனால் அவன் புகழ் பழைய பாகவத புராணத்திலேயே விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறது. இதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. ஆகவே அதற்கேற்ற முறையில், பழைய புகழின் புது உருவமாகவே அவன் விளங்கவேண்டும். அவன் நடைஉடை, அணிமணி ஏற்பாடுகள் யாவும் இதற்கு இசைவாகவே இருக்கவேண்டும். இதுவே என் கருத்து. இதுபற்றி நான் நன்றாகச் சிந்தித்திருக்கிறேன். இது வகையில் ஒரு புத்தம் புதிய திட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறேன். பாரத வீரனுக்கும் வீரனுக்கும் குழுவினருக்கும் இணக்கமானால், அதை விளக்க முன்வருவேன்” என்றான்.
பாரத வீரன் முகத்தில் புத்தார்வம் துள்ளிக் குதித்தது. அவன் கிளர்ச்சியுடன் எழுந்தான்.
66
'ஆகா, நல்ல கருத்துரை புகன்றீர், படைத்தலைவரே! இன்று முதல் நான் உம்மைக் குளத்தூரான் என்ற பழைய பெயரால் குறிக்கமாட்டேன். உம் புகழ் இனி 'மாவிதுரன்' என்று வழங்கட்டும்! உம் அறிவுரையை நாம் மெச்சினோம். ஏற்று நடக்க இசைந்தோம்.நாளை உம் தலைமையிலேயே குழுக்கூடட்டும். உம் திட்டத்தைக் கூறி வழிகாட்டுக!" என்றான்.
தலைமைத் திறமை அமைச்சன் முத்துக்குடும்பனிடமிருந்து 'மாவிதுர’னிடம் சென்றுவிட்டது என்று குழுவினர் கண்டனர். அவன் திட்டத்தையே அனைவரும் ஆவலுடன் எதிர்ப் பார்த்தனர்.
சிக்கல் முற்றிலும் இனி தகர்ந்தது என்று முத்துக் குடும்பனும் மகிழ்ந்தான்.