4. மருதவாணன் கோட்டை
மறுநாள் காலையில் செயற்குழு மீண்டும் கூடிற்று.
மணிவண்ணன் முன்மொழிய, முத்துக்குடும்பன் ஆதரிக்க, மாவிதுரன் தலைவனாய் அமர்ந்தான். தன் புதுப்பெருமை தோன்ற, அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். பின் பாரத வீரனைச் சாய்ந்த பார்வையால் பார்த்துக்கொண்டு பேசினான்.
“எண்டிசை ஆளப்போகும் மருதூர் மாணிக்கம் என்னும் தண்டமிழ்ப் பாரதவீரனே! தோழர்களே!
“இந்த மாநகரின் பெயர் செல்வமருதூர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் முன்காலங்களில் மருதவாணன் என்ற வீரமன்னன் இருந்து ஆண்டான். இதையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இதற்கேற்ப, இந்த மாநகரின் வடமேற்கில், சிறிது தொலைவில், ஒரு கோட்டை இருக்கிறது. அது பாழடைந்து கிடக்கிறது.காட்டின் நடுவில் இருக்கிறது.வேடர்கள் இன்னும் அதை மருதவாணன் கோட்டை என்றுதான் அழைக்கிறார்கள். நம் மருதநாட்டு இளவரசியின் முன்னோர்கள் ஆண்ட கோட்டை அதுதான். இதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
"நம் குழு பாரத வீரனுடன் அங்கே செல்லட்டும். தேடட்டும். கவசம், வில், வாள் முதலியவற்றுக்கான துப்புத் தடயங்கள் அங்கே பெரும்பாலும் கிடைக்கக் கூடும்.
66
“இச்சமயம் நான் உங்களுக்கு இன்னொன்றும் நினைவூட்ட வேண்டும். மருதூர், மருதநாட்டிளவரசி, மருதவாணன் என்ற பெயர் மரபுகளின் மூலத்தை எண்ணிப் பாருங்கள்! மருதநிலத்தின் தெய்வம் இந்திரன். மருதநிலத் தமிழ் வேளிர்களின் முன்னோன் அவனே. மருதவாணன் இந்த இந்திரன் நேர்மரபில்