பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

||-

அப்பாத்துரையம் - 39

வந்தவன். பாரதப் போரில் கதிரவன் ஒளிக் கவசத்தைக் கர்ணனிடமிருந்து இந்திரனே பெற்றான். அது மருதவாணன் மரபில்தான் விட்டு வைக்கப்பட்டது. 'பாண்டிய மன்னரிடம் இருந்த இந்திரவாளும் அவனிடம்தான் கடைசியில் இருந்ததாம்! ஆகவே மருதவாணன் கோட்டையில் சூரியன் கவசமும் இந்திரன் வாளும் நமக்குக் கிடைக்கக்கூடும்.

"பாரத வீரனாகிய கற்கி இவ்வூரில் பிறப்பானென்பது நம் முன்னோர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் அவை இங்கே வைத்துக் காக்கப்பட்டுள்ளன’

95

இப்புதிய கருத்துரை எல்லாருக்கும் பிடித்தது. அதை அவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பாரத வீரனோ மகிழ்ச்சிக்கடலில் குளித்தாடினான்.

கோட்டை யை அவர்கள் அன்றே முற்றுகையிட்டார்கள். அது பாழடைந்து இடிந்து தகர்ந்து கிடந்தது. அவர்களை அங்கே தடுக்க யாரும் இல்லை. முட்புதர்கள், கொடி தழைகள், பாம்பு பல்லிகள்தான் சிறிது சிறிது தொல்லை தந்தன. அவற்றால் அவர்கள் முயற்சி சிறிதும் தளரவில்லை. ஒவ்வொரு பகுதியாக அவர்கள் கோட்டையைத் துருவித் தேடினார்கள்.

துருப்பிடித்த வாள்கள், ஈட்டிகள் ஏராளமாகக் கிடந்தன. குந்தங்கள், வில் அம்புத் தூணிகள் போதுமான அளவில் கிடைத்தன. வெடிப்படைகள்,பீரங்கிகள், குண்டுகள்கூட ஓரளவு இருந்தன. அத்துடன் துருவேறாத, கிட்டத்தட்டப் புதிய ஒரு வெடிப்படையும் அகப்பட்டது. அது மற்றவற்றைவிட நீளமாயிருந்தது. உண்மையில் அது அது கோட்டையைச் சார்ந்ததல்ல. ஒரு வேட்டைக்காரனுடையது. அப்பக்கம் அவன் மான் முயல் வேட்டை நாடியே வந்திருந்தான். எதிர்பாராதபடி பாம்புக் கடியுண்டு அவன் அங்கேயே மாண்டான். அவன் வெடிப்படை அங்கேயே கிடந்தது.

பாரத வீரன் அந்த வெடிப்படையைப் பெருமிதத்துடன் எடுத்தான். என்ன நினைத்தோ, அதைக் கையில் பிடித்தான். இலக்கு வைத்துச் சுடுபவன்போல மணிவண்ணனை நோக்கி நீட்டினான். மணிவண்ணன் உயிருக்கு அஞ்சி அலறினான். அது கண்டு பாரத வீரன் விலாப்புடைக்க நகைத்தான்.