பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

66

133

'அன்பனே! மருந்தும் குண்டும்தான் இல்லையே. இதற்கு இவ்வளவு அச்சமா?" என்று கேட்டான். தம் சீரிய முயற்சியைக் கூட மறந்து அனைவரும், மணிவண்ணனைப் பார்த்து நகையாடினார்கள்.

வில், அம்புத்தூணி, வாள், ஈட்டி ஆகியவற்றில் மிக நல்லவை பார்த்து, அவர்கள் தேர்ந்தெடுத்தனர். மெருகிடப் பட்டபின் அவை உண்மையிலேயே நல்ல படைக் கலங்களாயின.

ஒரு வாளையும் வில்லையும் அம்புத்தூணியையும் மாவிதுரன் பொறுக்கி எடுத்தான். வாளின்பிடி 'இ' என்ற எழுத்து வடிவாய் மடங்கி இருந்தது. அதுவே மருதவாணனிடமிருந்த இந்திரன் வாள் என்று அவன் விளக்கந் தந்தான். வில் நுனியிலும் தூணிமீதும் குரங்கடையாளம் பொறித்திருந்தது. அவை விசயனின் காண்டீவமும் அம்பறாத்தூணியும் ஆகும் என்று மாவிதுரன் சாதித்தான்.! இவ்விளக்கங்கள் பாரத வீரனுக்கு மிகவும் கிளர்ச்சி தந்தன.

அம்புகள் போதுமான அளவில் இல்லை. ஆனால் அம்பு நுனிகள் ஏராளமாய் இருந்தன. அவற்றைக் குச்சிகளில் இணைத்து அவர்கள் போதிய அம்புகள் செய்து கொண்டார்கள். குண்டுகளும் நிறையவே கிடைத்தன. ஆனால் அவற்றுள் ஒரு சிலதான் வெடிப்படையின்

குழாய்க்கு

சைவா

யிருந்தன. அவன் அளவாக ஈயக்குண்டுகள் சில உண்டுபண்ணிக் கொண்டார்கள். போதாக் குறைக்குக் கல் குண்டுகளைத் தேய்த்தும், மண் உருண்டைகளை உருவாக்கியும் அவர்கள் வளங்கண்டார்கள். தவிர, தீபாவளி, திருக்கார்த்திகை, பொங்கல் ஆகிய விழாக்களுக்கு வானவெடி செய்யும் ஒரு தொழிலாளியை அவர்கள் அணுகினார்கள். அவனிடமிருந்து சிறிதளவு வெடிமருந்து பெற்றார்கள். இதுவே பாரத வீரனுக்கு வெடிப்படை மருந்தாய் உதவிற்று.

கோட்டையில் அவர்கள் தேடிய பொருள்களில் ஒரு பாதி அகப்பட்டுவிட்டது. ஆனால் கவசம், தேர், குதிரை ஆகியவை இன்னும் கிடைக்கவில்லை. சிறிது மனசோர்வுடனே அவர்கள் திரும்பலாயினர். ஆனால் திரும்பும் வழியே எதிர்பாராத வகையில் அவர்களுக்குப் புதுவளம் தந்தது.