140
அப்பாத்துரையம் - 39
உயிர். இது கூதாளம் போடுகிறது” என்று பாரத வீரன் கேலி
பேசினான்.
தேர்த்திட்டம், வேதாளத்திட்டம் முடிந்தபின் கவசத்திட்ட ஆராய்ச்சி தொடங்கிற்று.
கவசத்தின் இற்றுவிட்ட பகுதிக்குத் தாள் அட்டை ஒட்டுப் போடலாம் என்று பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் சித்தேசி இதை விரும்பவில்லை. “முதுகில் யாராவது ஈட்டியால் குத்தினால், அல்லது தலை மீது வாளால் வெட்டினால் சாயம் வெளுத்துப் போகுமே!" என்று அவன் தடை கூறினான். ஆனால் பாரத வீரன் இப்போது மீண்டும் தலையிட்டான்.
"தூய தமிழ் வீரர் என்றும் முதுகுக்குக் கவசமிட மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆகவே முதுகைப்பற்றி அவ்வளவு கவலைப்பட வேண்டியதில்லை. தமிழகத்தில் முதுகில் குத்தும் கோழை இருக்கவே முடியாது. ஆனால் தலைக்கு மட்டும் அட்டை கூடாதுதான். நல்ல இரும்பு ஒட்டுத்தான் போடவேண்டும். ஆனாலும் உள்ளே இரும்புக் கம்பி இணைத்த தகரம் போதும் என்று நினைக்கிறேன். முகத்துக்கு என்ன செய்வது என்பது மட்டும் எனக்கு முற்றிலும் விளங்கவில்லை” என்றான்.
இந்த இடத்தில் சித்தேசியின் கற்பனை எல்லாக் கற்பனையையும் ஒருபடி தாண்டித் துள்ளிக் குதித்தது. கம்பன் கற்பனையே சித்தேசி உருவில் வந்ததோ என்று எண்ணும்படி இருந்தது. அவன் பேச்சு! அவன் பாரத வீரனுக்குத் தனி வணக்கம் தெரிவித்துக் கருத்துரை கூறினான்.
"அன்பர்களே, பாரத வீரன் கண்கண்ட கற்கியல்லவா? அதனால்தான் அவனுக்காகக் காத்திருந்த இந்தக் கவசத்தில் முகப்பு இல்லாமலிருக்கிறது. இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன்.பாகவத புராணப்படி கற்கிக்குரிய முகம் குதிரை முகம். ஒரு குதிரை முகத்தையே நாம் செய்து, கவசத்தின் முகப்பில் பொருத்திவிடலாம். அப்போது முகம் உண்மையிலேயே கற்கிமுகமாய் விடும். முகத்தை வெண்கலத்தில் செய்தால், பாரத