பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

141

வீரன் குரல்கூட, குதிரைமுகக் கற்கியின் வெண்கலக் குரலாய் விடும்” என்றான்.

து

பாரத வீரன் இது கேட்டுத் துள்ளிக் குதித்தாடினான். களிப்பில் சித்தேசியையும் தூக்கிக்கொண்டே ஆடினான்.

கற்பனை கற்பனையைத் தூண்டிற்று. மற்றவர்களும் தத்தம் கற்பனை ஆற்றல்களைத் துருவித் தீட்டினார்கள்.

66

"கவசம் கதிரவனிடமிருந்து கர்ணன் மூலமாக இந்திரன் பெற்ற கவசமே என்பதை இது காட்டுகிறது. கற்கிக்கு வந்து சேரும்படியாகவே இந்திரன் வாங்கி வைத்திருக்க வேண்டும்" என்றான் நீலகண்டன்.

"தேர்கூட இந்திராணி குளிக்கச் செல்வதற்காக இந்திரன் அமர்த்திய தேராகவே கருத இடமுண்டு. மருதவாணன் இந்திரன் மரபினனாதலால், இந்திராணி அதை இளவரசிக்காக விட்டுச் சென்றிருக்க வேண்டும்" என்றான் மணிவண்ணன்.

ஒவ்வொரு கற்பனைக்கும் ஒரு காலைத் தூக்கி ஆடினான் பாரத வீரன்!