144 ||__.
அப்பாத்துரையம் - 39
அவரும் அப்படியே. ஆம். தன் குருவும் அதுபோலவே தாமாகத் தன்னை வந்தடைவது உறுதி. தான் இப்போது செய்யத் தக்கதெல்லாம், தெய்வம் விட்ட வழி செல்வது, காத்திருப்பது ஆகிய இரண்டுமே. தேர் இப்போது தெய்வம் விட்ட வழிதான் சென்றது. அது திட்டமும் திசையுமில்லாமலேயே சென்றது. இந்நிலையில், வழியில் முதல் முதல் காண்பவரையே தன் குருவாகக் கொள்ளல் தகுதி என்று அவன் திட்டம் செய்தான்.
வேளை உச்சியை அணுகிற்று. திடீரென்று அப்போது தான் முழு உயிர் வந்ததுபோலக் கழுதை பறந்தோடிற்று. அந்தக் கழுதை தெய்வீகமாகவே தான் தேருடன் கிடைத்தது. தெய்வமே அதற்கு வழிகாட்டியிருக்க வேண்டும். குருவின் மோப்பம் அறிந்தே அது விரைகிறது என்று அவன் கருதினான். குருவைக் காணும் ஆர்வத்துடன் அவன் உள்ளம் துடிதுடித்தது.
உண்டு.
உண்மையில் கழுதை திடுமென விரைந்ததற்கு ஒரு காரணம்
உ
குட்டியாயிருக்கும் போது அந்தக் கழுதையை வளர்த்த வண்ணான் நொடித்துப் போனான். அருமையாக வளர்த்த கழுதைக் குட்டியை விற்று விட்டான். உடல் நோக உழைத்தான். கழுதை விரைந்து இரண்டு கை கடந்தது. கடைசி வண்ணானும் நொடித்துப்போனான். அவனுக்குக் குடிகஞ்சிக்கும் வழியில்லை. அதேசமயம் அவனுக்குப் பிள்ளைக் குட்டி, உற்றார் உறவினர் யாருமில்லை. அவன் ஒரே உறவாக அந்தக் கழுதை இருந்தது. அதை அவன் விற்க விரும்பவில்லை. அது அவன் வறுமையிலே பங்கு கொண்டது. அவன் தான் குடிப்பதில் அதற்குப் பாதி கொடுத்தான்.வேறு வேலை இல்லாததால், அதை ஊர்ப் புறத்தில் திரியவிட்டான். ஒரு தடவை கஞ்சி குடித்து விட்டு, அது காடு காடாக நாள் முழுதும் திரிந்தது. மருதவாணன் கோட்டைப் பக்கத்தில் சீடர் அதைக் கண்டபின், அதற்குப் புதுவாழ்வு தொடங்கிற்று.
அது சென்ற வழி முதல் வண்ணான் துறையடுத்திருந்தது. அந்தத் துறையை நோக்கித்தான் அது விரைந்தது. அதன் மோப்பத்தின் இரகசியம் இதுவே.