மருதூர் மாணிக்கம்
145
உச்சி வரை உழைத்து வண்ணான் சோர்ந்து போயிருந்தான். துணிகளை மூட்டையாகக் கட்டி வைத்து விட்டு பாறினான்.
ளைப்
அன்று அவன் வீட்டிலுள்ள ஒரு மூளி மரக்காலில் கஞ்சி கொண்டு வந்திருந்தான். கஞ்சி முழுவதும் குடித்த பின்னும் மரக்கால் அவன் கையில் இருந்தது.
மூட்டையைச் சுமந்து செல்ல ஒரு கழுதை இல்லாக் குறை அச்சமயம் அவன் உள்ளத்தில் நிழலாடிற்று.
அவனை நோக்கி ஒரு விசித்திரத் தேர் விரைந்து வந்து கொண்டிருந்தது. ஒரு விசித்திரக் கழுதையும் மூன்று அட்டைக் குதிரைகளும் அதில் பூட்டியிருந்தன. குதிரைமுக மனிதனொருவன் அதில் அமர்ந்திருந்தான். அக்காட்சி கனவில் காணும் காட்சிபோல இருந்தது. அது இன்னது என்று புரிய முடியாமல் அவன் திகைப்படைந்தான். ஆனால் அவன்முன் அடுத்து நடந்த நிகழ்ச்சிகள் திகைப்பை மலைப்பாக்கின.
பாரதவீரன் தன் கண்முன் வண்ணானைக் காணவில்லை. குருவையே கண்டான். வண்ணான் கையிலிருந்த மரக்கால் அவன் எண்ணத்தை இன்னும் உறுதிப்படுத்திற்று. 'துரோணம்' என்பதன் பொருள் மரக்கால்தான். துரோணாச்சாரி என்ற பெயரை அது உடனே அவனுக்கு நினைவூட்டிற்று. அவர்தான் வீரகுரு என்பதை ‘மரக்கால்' மூலம் தெய்வமே காட்டிற்று என்று அவன் கருதினான்.
குருவைக் கண்டதும் அவன் மகிழ்ச்சி கரை கடந்தது.
முறைப்படி, குருவினிடமிருந்து முப்பது முழதூரத்துக்கப் பால், அவன் தேரை நிறுத்தினான். கழுதையை அவிழ்த்து விட்டு விட்டு, குருவை நோக்கி விரைந்தான். இம்மெனுமுன், அவன் அடியற்ற மரம்போல் அவர் காலடிகளில் விழுந்தான். திருவடித்தாமரைகள் இரண்டையும் இறுகப்பற்றினான். கண்களில் ஒற்றிக் கொண்டான். தழுதழுத்த குரலில் அவரிடம் வேண்டுதல் செய்தான்.
"மாசுகள் அகற்ற வந்த வான் குருவே! துரோணாச் சாரியாரின் தெய்வ மரபில் வந்த திருவுருவே! ஏழையென்