பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

அப்பாத்துரையம் - 39

படித்தவன் என்று தெரிகிறது. அத்துடன் நம் கழுதையை அவனே நமக்குக் கொண்டு தந்திருக்கிறான். கழுதையோடு அவனையும் நம் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கருதுகிறேன்" என்றான்.

கண்ணாயிரம் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவள் முகம் ஆயிரம் கோணல் கோணிற்று. அதேசமயம் ‘படித்தவன்' என்ற சொல் கேட்டு வள்ளி வெள்ளாவியிலிருந்து எட்டிப் பார்த்தாள். குதிரைமுகத் தோற்றம் கண்டு அவள் மறுபடியும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆயினும் அதே குதிரை முகத்தைக் கண்டு சேந்தன் துள்ளிக் குதித்தான். 'குதிரைமுக மாமா, குதிரைமுக மாமா' என்று அவன் பாரத வீரன் முழந்தாள்களைக் கட்டிக்கொண்டான். பாரதவீரன் அவனைத் தன் இரும்புக் கைகளால் மெல்லத்தூக்கி எடுத்தான். குதிரை முகத்துடனே விளையாடவிட்டான். இரண்டு கணங் களுக்குள் சேந்தன் அவனுடன் பழகிவிட்டான். சேந்தனுக்கு அவன் ஒரே ‘மாமா’ ஆய்விட்டான்.

66

வெளியே வந்த பின், வள்ளி தேரை ஆர்வத்துடன் பார்த்தாள். பாரதவீரன் அதைக் கவனித்தான். அது உன்னுடையது தானேயம்மா! தம்பியையும் கூட்டிக் கொண்டுபோய் விளையாடு" என்று அவன் சேந்தனை அவளிடம் கொடுத்துத் தேரில் ஏற்றினான். அவர்கள் ஆசைதீரத் தேரில் அவர்களை வைத்து மூன்று தடவை வீட்டைச் சுற்றி ஓட்டினான. இதனால் வள்ளியின் உள்ளம் முற்றிலும் அவன் வயப்பட்டது.கண்ணாயிரம் உள்ளக்கதவும் விரைவில் அவனுக்கு விரியத் திறந்து விட்டது.

வண்ணானுக்கு அன்று முதல் பாரத வீரன் துறையில் ஒரு நல்ல துணைவனானான். சம்பளமில்லாத ஆர்வவேலையாளு மானான். சேந்தனுக்கும் வள்ளிக்கும் அவன் அன்பு மாறா மாமனாகவும், விளையாட்டுத் தோழனாகவும், ஆர்வ ஆசிரியனாகவும் விளங்கினான். தவிர, கண்ணாயிரத்துக்கு அவன் ஒரு கண்ணும், ஒரு கையுமாய் விளங்கினான். அவன் பாச் வலைக்குள் குடும்ப முழுவதுமே ஈடுபட்டது. ஒரு சில நாட்களுக்குள் குருவின் குடும்பத்தில் அவன் பிரிக்க முடியாத ஒரு உறுப்பினன் ஆனான்.