மருதூர் மாணிக்கம்
151
எல்லாத் திறங்களும் தனக்கு வளர்ந்து விட்டதாக அவன் குருவைப் புகழ்ந்தான். அவரும் அதை ஏற்றார். இறுதியில் அவனுக்கு வாழ்த்துரை கூறினார், “குருபக்தியில் சிறந்த வீரச் சீடமணியே! உன் வீரம் உலகெங்கும் சிறப்பதாக! உன் புகழ் ஓங்குமாக! நீ வெற்றியுடன் உலா முடித்து, இளவரசியுடன் வீர சிங்காதனம் அமர்வாயாக! ஆனால் உன் புகழாட்சியில் முதல் செயலாக, வீரகுருவின் இந்த விருப்பத்தை மறந்துவிடாதே! இளவரசியின் கட்டளையுடன் என் கட்டளையையும் நிறைவேற்றி, வள்ளியின் உள்ளத்தில் பால் வார்ப்பாயாக!" என்று அவர் முடித்தார்.
66
"தங்கள் திருவடிகளைத் தலைமேற்கொண்டு செல்கிறேன். இனி என்னால் முடியாதது எதுவுமில்லை. தாங்கள் கூறியபடியே யாவும் செய்கிறேன். இளவரசியின் அன்புக் கட்டளைக்கு உட்பட்டு, என் உள்ளத்தில் வள்ளி இடம் பெறுவது உறுதி. தங்கள் கட்டளைகளையும் இளவரசியின் கட்டளைகளுக்கு ஒப்பாகவே கருதி நிறைவேற்றுவேன்" என்று கூறி விடை பெற்றான்.
கண்ணாயிரம் அவனுக்கு விடைகொடுக்கும்போது, கண்ணீராயிரமாகக் காட்சியளித்தாள். வள்ளியின் இளங்கைகள் பாரத வீரன் கழுத்தைப் பின்னிக்கொண்டன. கண்ணாயிரமே அவளைப் பற்றி இழுத்துச் செல்லவேண்டியிருந்தது.
சேந்தன் ஒருவனே களிப்புடன் அவனுக்கு வழி அனுப்பினான். 'குதிரைமுக மாமா! குதிரைமுக மாமா! யாரை மறந்தாலும் என்னை மறக்காதே, மறந்தால் நான் உன்னைத் தேடி வந்துவிடுவேன்” என்றான் அவன்.
"நானே உன்னைத் தேடி வருகிறேன், சேந்து! நீ எல்லாரையும் அன்பாகப் பார்த்துக்கொள்" என்று கூறிப் பாரத வீரன் வெளியேறினான்.
வீரகுரு
எவ்வளவு
வற்புறுத்தியும், தேரையும் கழுதையையும் உடன்கொண்டு செல்லப் பாரத வீரன் மறுத்து விட்டான். கழுதையை அவன் மாமனாருக்கு வீரக் காணிக்கை யாக அளித்தான். தேரை வள்ளியின் அன்புப் பரிசாக்கினான். மற்றவர்களுக்குத் தன் வாக்குறுதியையே பரிசாக்கிச் சென்றான்.