பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

153

முனகலும் அலறலும் தவிக் காபாலிகன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் கை 'வா' என்று சாடை காட்டிற்று. பாரத வீரன் அவனைப் பின்தொடர்ந்தான். பாலைவனத்தின் நடுவே, ஒரு முள்மரக்காவின் இடையில், இடிந்து தகர்ந்த ஒரு கோயில் இருந்தது. காபாலிகன் அதனுட் சென்று பயங்கரமான கூச்சல்களிட்டுப் பூசை நடத்தினான். பின் எதுவும் பேசாமலே, பாரத வீரனை உறுத்துப் பார்த்துவிட்டுச் சென்றான்.

பாரத வீரன் காளியின்முன் நின்றான். உணவு நீரில்லாமல் அத்தெய்வத்தின் திருநாமங்களை அவன் உள்ளன்புடன் பாடினான். இரவிலும் அவன் உறங்கவில்லை. ஒற்றைக்காலில் நின்று நோன்பாற்றினான்.

இரவில் காட்டில் திரிந்த முரட்டுக் காட்டெலிகள் கோயிலினுள் புகுந்தன. சிதறிக் கிடந்த படையல் துணுக்குகளை அவை நாடின. ஆனால் காளி பக்தனால் இதைப் பொறுக்க முடியவில்லை. அவன் வாள் கொண்டு அவற்றைத் தாக்கினான். நூற்றுக்கணக்கில் எலிகளைக் கொன்றான். கோயிலெங்கும் ஒரே குருதிக்களமாயிற்று.

நாள்தோறும் உச்சி கழிந்து காபாலிகன் வந்து பூசை நடத்தினான். பக்தன் நின்ற நிலையைக் கண்டான். காளி கோயிலருகில் உள்ள குருதிக் களரியையும் கூர்ந்து நோக்கிச் சென்றான். அவன் உள்ளார்ந்த மகிழ்ச்சியை அவன் முகம் காட்டிற்று. அது கண்டு பாரத வீரனும் மகிழ்வு கொண்டான்.

இரண்டு இரவும் மூன்று பகலும் இவ்வாறு கழிந்தன. காளி பின்னும் காட்சி தரவில்லை. அவன் இப்போது முன்னிலும் கடுநோன்புகளை மேற்கொண்டான். தலைகீழாய் நின்றான். காளியின் திருநாமங்களையும் தலை கீழாய் உருவிட்டான். முட்களால் உடலைக் கீறிக்கொண்டான். சிந்திய தன் குருதியை மூக்கில் தோய்த்தான். மூக்காலேயே காளியின் திருநாமங்களை நிலத்தில் எழுதினான்.

விடிய ஒரு யாமமாயிற்று. இயற்கை அவனை மீறிற்று. அவன் உணர்விழந்து கீழே விழுந்து கிடந்தான். அப்போது கூட அவன் நா காளியின் திருநாமங்களை முனகிக் கொண்டே யிருந்தது.