பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

அப்பாத்துரையம் - 39

அச்சமயம் எங்கிருந்தோ ஒரு குரல் செவியில் விழுந்தது, 'மகனே, எழுந்திரு' என்ற கூச்சல் விட்டுவிட்டு மும்முறை கேட்டது. மூன்றாவது குரல் கேட்குமுன் அவன் அரையுணர்வில் எழுந்திருந்தான். கண்களை மெல்லத் திறந்தான். செவி கொடுத்துக் கேட்டான். என்னவியப்பு! குரல் காளி உருவத்திடமிருந்தே வந்தது. அதற்கேற்ப, காளி உருவத்தின் கண்கள் சுழன்றன. அவை தெய்வீக ஒளியுடன் வீசின. அவன் உடல் நடுங்கிற்று. ஆனால் அவன் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது. அவன் காளியுருவின்முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து தெண்டனிட்டான்.

அன்னை மீண்டும் பேசினாள்.

"மகனே, எழுந்திரு! உன் பக்தியை மெச்சினேன். நீ வீரன் மட்டுமல்ல. வீரபக்தன். உன் வீரத்துக்கு உன்பக்தியே இணை. உன் பக்திக்கு உன் வீரமே இணை. எழுந்திரு! உனக்கு என்ன வேண்டும், கேள்" என்றாள்.

பாரத வீரன் வேண்டினான்.“அன்னையே! முதலில் நீங்கள் எனக்கு நேரில் காட்சி தரவேண்டும். நான் உலகெங்கும் புகழ் பரப்பி, வீர உலா ஆற்றி வெற்றி பெற வேண்டும். என்னை எதிர்பார்த்திருக்கும் இளவரசியையும், உலக ஆட்சியையும் பெறவேண்டும். இப்படி என்னை வாழ்த்தி அருள்பாலிக்க வேண்டுகிறேன்” என்றான்.

அன்னை மீண்டும் பேசினாள். "மகனே! நீ என்னை நேரில் பார்க்கும் நாள் இன்னும் வரவில்லை. ஏனென்றால் அவ்வாறு பார்த்தபின், நீ திரும்ப உலகத்துக்குப் போக முடியாது. ஆயினும் உன் விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன். நீ ஒரு கணநேரம் கண்ணை மூடிக்கொண்டிரு. அத்துடன் இளவரசி உருவையே மனதில் கருதிக் கொண்டிரு. அந்த உருவிலேயே நான் உனக்குக் காட்சி தருகிறேன். வாழ்த்தி அருள்பாலிக்கிறேன்” என்றாள்.

பாரத வீரன் அவ்வாறே கண்களை மூடினான். ளவரசியையே கற்பனைக் கண்ணால் வழிபட்டான். ஒரு னத்திற்குள் “மகனே, கண்ணைத் திற” என்ற குரல் கேட்டது. குரல் இளவரசியின் குரலே. அவன்முன் இளவரசியின் உருவே