பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

155

நின்றது. அன்னை அறிவித்தபடி, அதுவே இளவரசியின் திருவுருக் கொண்ட அன்னை என்று அவன் அறிந்து கொண்டான்.

அன்னையாக வந்த இளவரசி பேசினாள்.

66

"அன்பனே! நீ விரும்பியபடியே வீரப்புகழுடன் வெற்றி உலா முடிப்பாய்! அதன்பின் இளவரசியையும் இருநில ஆட்சியையும் பெற்று வாழ்வாயாக! ஆனால் ஒரு எச்சரிக்கை மட்டும் தர விரும்புகிறேன். நீ நேராக இப்போது வீட்டுக்குச் செல்லவேண்டும் எக்காரணம் கொண்டும், அதுவரை திரும்பிப் பார்க்கக்கூடாது. அத்துடன் வீர உலாவுக்கேற்ற வீரப்பாங்கனை நீ தேர்ந்தெடுக்க வேண்டும். போய் வா! வெற்றி உனதே!"

பேச்சு முடிந்தது. இளவரசி உருவம் காளி உருவின்பின் மறைய இருந்தது. அதற்குள் பாரத வீரன் மீட்டும் பேசினான். "மன்னிக்க வேண்டும். அன்னையே! இன்னும் ஒரு வேண்டு கோள்!" என்றான்.

"இன்னும் என்ன!" என்று திரும்பி நின்று கேட்டாள் அன்னை. அவள் முகத்தில் வியப்புக் குறி தோன்றிற்று.

“என் வீரகுருவின் விருப்பமும் நிறைவேற்ற வேண்டும். அவ்வகையில் இளவரசியின் திருவுள்ளத்தை இயக்கக் கோருகிறேன்” என்றான்.

அன்னை முகத்தில் வியப்புக்குறி படர்ந்தது. பாரத வீரன்கூட அதைக் கவனித்தான். ஆனால் கவனித்ததாக அவன் காட்டிக்கொள்ளவில்லை.

66

“அன்னையே, தாங்கள் அறியாதது என்ன இருக்கிறது? ஆயினும் கேட்கத் திருவுளம் கொண்டதால் சொல்லுகிறேன். வீரகுருவுக்கு வள்ளி என்று ஒரு பெண் இருக்கிறாள். அவளை நான் மணந்துகொள்ள வேண்டும் என்று குரு விரும்புகிறார். இளவரசியை நான் மணந்து அரசனானபின், இளவரசி யிடம் இதற்கான இணக்கம் கோர விரும்புகிறேன். அவர் உள்ளத்தைத் தாங்கள்..”

அன்னை குறுக்கிட்டாள். "வள்ளி உன்னை விரும்பு கிறாளா?” என்று கேட்டாள்.