பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

அப்பாத்துரையம் - 39

"ஆம், என்னையே நினைத்து ஏக்கமாயிருக்கிறாள்!' "மகனே, உன் உள்ளம் எப்படி?”

“நானும் தான், அன்னையே!... மன்னிக்க வேண்டும்!”

அன்னை முகத்தில் தோன்றிய குறிப்பு கோபக்குறிப்பா, சிரிப்பா, வியப்பா என்று அவனால் அறிய முடியவில்லை. ஆனால் விரைவில் அந்தக் குறிப்பு மாறிற்று. “சரி அப்படியே ஆகட்டும், மகனே. நீ போகலாம்” என்று கட்டளை பிறந்தது. அவன் உள்ளம் அமைதியுற்றுக் குளிர்ந்தது.

அன்னை மறைந்தாள். அவன் திரும்பினான். திரும்பிப் பாராமலே வீடு நோக்கிப் புறப்பட்டான்.

காலடிகள் அவனைப் பின்தொடரும் சத்தம் கேட்டன. சில சமயங்களில் அடங்கிய நகைப்பொலி கேட்டது. அடிக்கடி ‘பாரதவீரன்” “வள்ளி” என்ற பெயர் கூறி யார்யாரோ 'குசுகுசு'

என்று பேசினர். பின்னால் வருபவர் நிழலைக்கூட

ஒன்றிரண்டிடங்களில் அவன் கவனித்தான். ஆனால் அவன் விருப்பமெல்லாம் நிறைவேற்ற அருள்பாலித்தவள் அன்னை. அவள் கட்டளையை அவன் மீறத் துணியவில்லை. மீறவில்லை.

ஊருக்குள் வருமுன் காலடிகள் அடங்கின. பேச்சும்

ஓய்வுற்றது.

அவன் வீட்டுக்குச் சென்று நோன்பின் களைதீர உண்டான். பின் வெளிக்கூடத்தில் சென்று அவன் சாய்ந்தான். இரண்டுநாள், இரண்டு இரவு அவன் கண் விழிக்கவேயில்லை. களையார உறங்கினான்.

சீடகோடிகள் உலாத் தொடக்கத்துக்கான ஏற்பாடுகளில்

முனைந்தனர்.

பாரதவீரன் வீரத்தைப்பற்றிமட்டுமே இதுவரை சீடர்கள் அறிந்திருந்தனர். இப்போது அவன் பக்தியையும், உள்ளப் பாசத்தையும் அவர்கள் பாராட்டினர்! பக்தியை அவர்கள் கிட்டத்தட்ட நேரடிச் சான்றாகவே கேட்டறிய முடிந்தது. ஏனெனில் காபாலிகனாக வந்து, காளிகோயிலுக்கு வழி காட்டியவன் மாவிதுரனே. அத்துடன் ளவரசி'யாகிய