பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. பட்டிமந்திரி

பாரத வீரனைக் காணாமல் செல்லாயி பாகாய் உருகினாள். செங்காவியும் உள்ளூர வெதும்பினாள். அவன் இல்லாத ஒரு வாரகாலம் அவர்களுக்கு ஒரு பெரிய ஊழியாய்க் கழிந்தது. அவன் திரும்பி வந்ததே அவர்கள் இன்பக்கடலுள் ஆழ்ந்தனர். ஆயினும், அவர்கள் கவலை தீரவில்லை. உடல் தேறியபின் அவன் மீண்டும் போய்விடக்கூடும். இந்த எண்ணம் அவர்களை ஓயாமல் வாட்டி வதைத்தது.

து

பாரத வீரன் சீடகோடிகளை அவர்கள் மனமார வெறுத்தார்கள். சபித்தார்கள். ஏனென்றால் அவன் புதிய போக்குக்கு அவர்களே எண்ணெய் ஊற்றி வளர்த்தனர். இது கண்டு அவர்கள் சீற்றங்கொண்டார்கள். ஆனால் அவர்களுடன் அனுதாபம் காட்டிய நண்பர்களும் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் குடும்ப அம்பட்டன் கோமாறனும், கோயிற் குருக்கள் நன்னயப் பட்டருமேயாவர்.

கோமாறன் சித்தர் நூல்களிலும் வேதாந்த நூல்களிலும் தேர்ச்சியுடையவன். நன்னயப்பட்டரோ, சைவ வைணவ சித்தாந்த நூல்களையும், திருக்குறளையும் கரைத்துக் குடித்தவர். பாரத வீரன் போக்கை இருவரும் கண்டித்தார்கள். ஆனால் ளைஞர்களை மட்டும் குற்றம் கூறிப் பயனில்லை என்று இருவரும் கருதினர். அவன் கற்பனை நூல்களையே மிகுதியும் படித்தான். அவையே அவனுக்கு மூளைக்கொதிப்பு உண்டு பண்ணின என்று கருதினார்கள்.

செல்லாயியும் செங்காவியும் அவர்கள் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.அந்த நுல்களை மறைத்துவிட அனைவரும் சேர்ந்து திட்டமிட்டனர். கோமாறன் இது வகையில் புதுமை வாய்ந்த ஒரு திட்டம் வகுத்தான்.