பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

66

அப்பாத்துரையம் - 39

"குதிரைமுகத்துடன் வீரஉலா வரும் பாரத வீரனுக்கு ஒரு பேரரசு கிடைக்கப்போகிறது. மனிதமுகத்துடனே அவனுடன் சென்றால், ஏன் ஒரு சிற்றரசாவது கிடைக்காது” என்று அவன் எண்ணினான். அவனுக்குப் புதிய ஊக்கம் பிறந்தது. மனைவிமார் களிடம் அவன் இதைப் பற்றிக் கூறவில்லை. வயிற்றைக் கேட்டுக்கொண்டா உணவு தேடுவார்கள்? அவர்களுக்காகத் தானே அவன் உழைத்தான்? பயன் அவர்களுக்கு, முயற்சி தனக்கு! இதுவே அவன் கருத்து.

அவன் பாரத வீரனைத் தேடிப் புறப்பட்டான்.

தனக்கு வேண்டிய ஆடையணிகளை அவன் ஒரு சிறு மூட்டையாகக் கட்டினான். அவன் குடும்பத்தின் சொத்தாக அவனிடம் ஒரு கழுதைக் குட்டிதான் இருந்தது. மூட்டையைக் கழுதைக் குட்டியின் முதுகில் ஏற்றிக்கொண்டு அவன் பயண

மானான்.

வீட்டில்தான் அவன் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ஆயினும் தனக்கு வரப்போகும் புதுப் பெருமையைப்பற்றி ஊரெல்லாம் தமுக்கடிக்கத் தவறவில்லை. அத்துடன் வழியெல்லாம் அவன் பாரத வீரன் புகழ் பாடிக் கொண்டே வந்தான். வழியிலேயே பாரத வீரன் சீடகோடிகளைப்போல அவனுக்கும் சீடகோடிகள் திரண்டார்கள். எனவே, அவன் புகழ் அவனுக்கு முன்பே செல்வமருதூர் சென்று எட்டிற்று. பேரரசனைப் பார்க்க வரும் சிற்றரசன்போல, அவன் செல்வ மருதூருக்குள் வருகை தந்தான்.

பாரத வீரனின் சீடகோடிகளில் சிலர் அவனை எதிர் கொண்டழைத்தனர். கானமும் முரசும் முழங்கின. இசைக் குழு பாரத வீரன் புகழுடன், அவன் புகழும் சேர்த்துப் பாடிற்று. அலையுடன் அலைமோதித் தழுவுவதுபோல சீடகோடிகளுடன் சீடகோடிகள் கலந்து மகிழ்ந்தார்கள்.

பாங்கன் வந்தபோது பாரத வீரன் அருசிருக்கைவிட்டு எழவில்லை. ஆனால் அவனை வரவேற்க இருகைகளையும் நீட்டினான். தப்பிலியப்பனோ, அவற்றை ஏற்கவில்லை. அவன் குனிந்து இரண்டு திருவடிகளையும் பற்றி வணங்கினான். பாரத வீரன் அவனை கைகொடுத்து உயர்த்தி, அருகே அமரும்படி கூறினான்.