பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

165

பாங்கன் அதை ஒரு உத்தியோகமாக்குவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

66

ஊதியமா? அப்படியானால் நாம் கூடப் பதவி கோரியிருப்போமே! செலவுகள் செய்தல்லவா நாம் சீடர்களாய்ப் பணி செய்கிறோம்" என்று அவர்கள் எண்ணினார்கள்.

காலத்தில்

ஆனால் பட்டி மந்திரியின் போக்குப் பாரத வீரனுக்குப் பிடித்து விட்டது. அவன் தொனி உயர்ந்தது. "அறிவுள்ள மந்திரியே, நன்று கேட்டாய்! உன் ஊதியம் உன் உயர் பதவிக்கேற்றதாயிருக்கும். இதில் ஐயம் வேண்டாம். வீர உலாக் ஊதியம் தர வழியிராது என்பதை நீரே ஒத்துக்கொள்வீர். அதேசமயம் மாதம் ஐம்பது வெள்ளி உமது பற்றில் சேரும். ஆனால் உம் உணவு உடைகள் முதற்கொண்டு, நீரே பார்த்துக் கொள்ளநேரும். இவைபோக என் பொருள் களைக் காப்பதும் என் நலங்களைப் பேணுவதும் உம் பொறுப்பாயிருக்கும். காயமாற்றுதல், மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகள் செய்தல் ஆகியவற்றையும் நீரே மேற்கொள்ள வேண்டும்.

"உலாவில் தோல்வியுற்ற எதிரிகளின் உடைமைகள் நம் கைப்பட்டால் அது உம்முடையவையே.

“ஒருவேளை - இதை நான் இப்போதே திட்ட வட்டமாக வரையறுக்க முடியாது-எதிரி நாடுகளோ, நாட்டுப் பகுதிகளோ, தீவுகளோ நம் கைப்படலாம். நீர் என்னிடம் உண்மையுடனும், திறமையாகவும் பணியாற்றினால், அந்தச் சமயம் நான் உமக்குத் தனிப் பரிசும் தரக்கூடும். உதாரணமாக ஒரு மாகாணத் தலைவனாகப் பதவி தரலாம். அல்லது ஒருசிறு நாட்டையே தந்து சிற்றரசனாகக்கூட ஆக்கலாம்!” என்றான்.

மந்திரி இதுகேட்டு, கூட்டத்தைச் சுற்றி வந்து கும்மாளமே அடித்தான். “தொண்டு செய்தால் தங்களிடம் தொண்டு செய்ய வேண்டும்.தங்களைப் போன்ற பெருமனம் படைத்த தலைவரிடம் பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்ததே என் பேறு. நான் இன்று முதலே உண்மையாயிருக்கத் தொடங்கி விடுகிறேன். நீங்கள் மட்டும் வாக்குறுதியை மறந்துவிடப்படாது” என்றான்.