பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




166

||--

அப்பாத்துரையம் - 39

எல்லாரும் சிரித்தனர். ஆனால் பாரத வீரன் சிரிக்கவில்லை. அவன் மேலும் பேசினான்.

66

வாக்குறுதி வாக்குறுதிதான். ஆனால் அது வருங்கால நிலைமைகளைப் பொறுத்தது. உலாக் காலத்தில் ஐம்பது வெள்ளி ஊதியம்தான் திட்டவட்டமானது. உலா முடிவில் அந்தப் பணம் எண்ணித்தரப்படும். அத்துடன் உலாக் காலத்தில் உன் பொருளாக ஏதேனும் இழக்க நேரிட்டால் அதற்கும் ஒட்டிக்கு இரட்டி பணம் வந்தவுடன் தருவேன். உலா முடிவில் உள்ள மதிப்பின்படி அதன் பின் பதவியும், அதற்கேற்ற ஊதியமும் தரப்படும்" என்றான்.

பட்டி மந்திரியின் காரியத்திறமை கண்டு சீடர்கள் மூக்கில் கை வைத்தனர். இப்படிப்பட்ட மந்திரிக்கு, எவ்வளவு சம்பளம் கொடுத்தாலென்ன என்று அவர்கள் பேசிக்கொண்டனர்.வேறு சிலர் பாரத வீரன் தாராள மனப்பான்மையை உயர்வாகப் பேசினர். "இப்பேர்ப்பட்ட தலைவனுக்கு எவ்வளவு தொண்டு செய்தாலும் தகும்" என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.