168
அப்பாத்துரையம் - 39
பாரத வீரன் உலாவுக்காக முன்பே ஏற்பாடு செய்தபடி, அவன் கோவேறு கழுதைமீது அமர்ந்தான்.
66
"ஆகா, 'கோவேறு கழுதை' என்ற பெயர் இப்போதுதான் அதற்குப் பொருத்தம்" என்றான் மணிவண்ணன்.
அவன் கூறியது இன்னதென்று அறியாமல் பல சீடர்கள் விழித்தார்கள். அவன் விளக்கம் கூறினான். 'கோ' என்றால் மன்னன். கோவேறு கழுதை என்றால் மன்னர் மன்னனாகிய பாரத வீரன் ஏறுகிற கழுதை என்று பொருள். இதுவரை அது பெயருக்கு மட்டும் கோவேறு கழுதையாயிருந்தது. இப்போது உண்மையிலேயே அது கோ ஏறு கழுதையாகி விட்டது. பாரத வீரன் இதில் தான் ஏறப்போகிறான் என்று நம் முன்னோர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்தப் பொருளுடன் முன் கூட்டி அதற்குப் பெயர் கொடுத்திருக்கிறார்கள்” என்றான்.
தம்மை மறந்து சீடர்கள் மணிவண்ணனைப் போற்றி ஆர்ப்பரிக்க இருந்தார்கள். பாரத வீரன் சட்டென்று கையமர்த்தினான். ஏனென்றால் அவர்கள் ஓசை படாமல் செல்லத் திட்டமிட்டிருந்தனர். வேறு வகையில் பாரத வீரன் அவனைப் பாராட்டினான். அவன் கோவேறு கழுதையினின்றும் இறங்கினான். மணிவண்ணனைத் தழுவி அவன் புலமையைப் புகழ்ந்தான்."இன்று முதல் மணிவண்ணன் என்ற உன் பெயரை 'மணிப்புலவன்' என்று மாற்றி அழைப்பேன். அதுவே உன் விருதுப் பெயராகட்டும்" என்றான்.
வேதாள உருவின் அட்டைப் பகுதிகள் கோவேறு கழுதையின் முன்னும் பின்னும் ணைக்கப்பட்டன. அது தொலைப் பார்வைக்கு ஒரு வேதாளமாகவே இருந்தது.
பட்டி மந்திரி தன் அழகிய ‘குதிரை'க் குட்டிமீது சென்றான். சீடகோடிகள் முன்னும் பின்னும் இரு மருங்கிலும் அணிவகுத்துச் சென்றனர்.
விண் மீன்களின் அரையொளிதான் அப்போது தெரிந்தது.
அவர்களிடையே ஓர் அரும்பெருஞ் செயல் தொடங்கும் ஆர்வம் மிகுதியாய் இருந்தது. ஆயினும் இச்சமயம் ஆர்ப்பாட்டம்