மருதூர் மாணிக்கம்
169
எதுவும் இல்லை. ஊரறிந்தால் ஏதாவது தடை ஏற்பட்டுவிடும் என்று பாரத வீரன் எச்சரிக்கை செய்திருந்தான்.
ண
ஊருக்கப்பால் பத்து நாழிகை தொலைவில் அணை கரையாறு ஓடிற்று. அது தாண்டிப் பாரத வீரனை வழியனுப்புவதென்று சீடர்கள் திட்டமிட்டிருந்தனர்.
நிலா உதயமாகுமுன் அவர்கள் ஊர் எல்லை கடந்து விட்டனர். ஊமை ஊர்வலம் இங்கிருந்து மெல்ல மெல்லக் கட்டுத் தளரலாயிற்று. அவர்கள் முதலில் அடங்கிய குரலில் பேசினர். அ இது வண்டுகளின் இரைச்சல்போல இருந்தது. பின் உரத்த குரல் எழுப்பினர். வழக்கமான ஆரவாரம் தொடங்கிற்று. வாழ்த்தொலிகள் கிளம்பின.
து
ய
சீடர்களுக்குள் மணிப்புலவனைப்போலச் சிறுபுலவர்கள் இருந்தார்கள். பல சிறு கவிஞர்களும் இருந்தார்கள். அவர்கள் உலாவுக்கென்று புதிய பாட்டுக்கள் கட்டியிருந்தார்கள். புராண இதிகாசங்கள், பழைய, புதிய தல புராணங்களின் கற்பனைகள் அவற்றில் இழைந்து ஊடாடின. அத்துடன் அவை மக்கள் பாடல்களாக மிளிர்ந்தன. பள்ளு, குறவஞ்சி, நிலாவணி, தெம்மாங்கு, காவடிச் சிந்து, நொண்டிச்சிந்து முதலிய பல வர்ணமெட்டுக்களில் அவை அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் இன்னோசைகள் இப்போது வானவெளியில் பறந்து மிதந்தன.
சீடர்கள் கற்பனையில் பாரத வீரன் குலமுதல்வன் கதிரவன் ஆனான். இளவரசியின் குலமுதல்வன் நிலாச் செல்வனானான். செல்வ மருதூரின் முன்னோனான மருதவாணனின் குலமுதல்வன் அழற் செல்வனானான். அவர்கள் பாடல்களும் முதலிய பாரதவீரன் குலமுதல்வனான கதிரவனைப் பரவின. பின் அவை இளவரசியின் குலமுதல்வன் நிலாச்செல்வன் புகழில்
ழைந்தன. இருவகைப் பாடல்களும் மருதவாணன் புகழுடன் பின்னின. இறுதியில் அவை பாரத வீரன் புதுப்புகழாக ஓங்கின. முப்பெரும் மரபுக்கும் உரியவன் என்ற முறையில் அவை அவனை மாருத சந்திர மார்த்தாண்டன் என்று பாராட்டின. இதுவும் அவன் விருதுப் பெயர்களுடன் ஒருவிருதுப் பெயராகச் சேர்ந்தது.
அவர்கள் செல்லும் வழியிலே மங்கம்மாள்சாலை குறுக்கிட்டது. அது கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர்