பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




170

அப்பாத்துரையம் - 39

நோக்கிச் சென்றது. அதன் இருபுறமும் மரங்கள் வானளாவி வளர்ந்திருந்தன. அதை அவர்கள் அணுகுவதற்குள் கிழக்கு வெளுத்துவிட்டது. சாலையை அவர்கள் கடக்கு முன், அங்கே அவர்கள் காணுதற்கரிய ஒரு காட்சியைக் கண்டார்கள். பாரதவீரன் உலாவின் முதல் வெற்றிக்கு அதுவே வழி வகுத்தது.

அம்முதல் வெற்றியைக் கண்கூடாக் காணும் பேறு சீடர்களுக்கும் கிடைத்தது. அதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்ததைவிட அவன் வீரம் பன்மடங்கு விளக்கமுற்றது.

சாலை வழியாக மற்றொரு ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அதன் முன்னணியில் ஒரு மிகப்பெரிய கூண்டு வண்டி சென்றது. அதன் உயரம் இரண்டரை ஆள் அளவுக்கு மேல் இருக்கும். அகலம் பாதை அளவாயிருந்தது நீளமும் அதற்கேற்றபடியே அமைந்திருந்தது. வெள்ளை சிவப்பு, பச்சை ஆகிய முந்நிறமுடைய தாள் மலர்களும் தாள் கொடிகளும் அதில் எங்கும் தொங்கின. கூண்டுக்குக் கதவுகள் பல இருந்தன. கதவுகள் எல்லாம் பெரிய பித்தளைப் பூட்டுக்களாலும் இரும்புப் பூட்டுக்களாலும் பூட்டப்பட்டிருந்தன. பெரிய இரும்புப் பட்டைகளாலும் சங்கிலிகளாலும் கதவுகளுக்கு வலிமையூட்டப்பட்டிருந்தது. கம்பிப் பட்டைகளுக்கும் சங்கிலிகளுக்கும் தனித்தனியாகப் பல பூட்டுக்கள் இருந்தன.

சோடி சோடியாக மூன்று சோடிக் காளைகள் கூண்டை மெல்ல மெல்ல இழுத்துச் சென்றன. வண்டியோட்டியிடம் சாட்டை இல்லை. சாட்டையினிடமாக நெடுநீளமான ஈட்டி ஒன்றுதான் இருந்தது. கூண்டின் முன்னும் பின்னும் பக்கத்திலும் படைவீரர் காவலாகச் சென்றார்கள். அவர்களிடம் வாள், ஈட்டி, வெடிப்படை ஆகியவை இருந்தன.

சீடர்கள் இக்காட்சியைக் கண்டு மலைத்து நின்றார்கள். சாலையருகே செல்ல அவர்கள் தயங்கினார்கள். ஆனால் பாரத வீரன் மலைக்கவில்லை. தயங்கவில்லை. அவன் போக்கே எல்லாரையும் மலைக்க வைத்தது.

அவன் கோவேறு கழுதையைத் தட்டிவிட்டான். கிட்டத்தட்டச் சாலை நடுவிலேயே போய் நின்றான். ஊர்வலத்தின் முன்னணி வீரரை அஞ்சாமல் எதிர்த்து நின்று