பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




172 ||. ||__

அப்பாத்துரையம் - 39

குறிபார்க்கும் முன் தாக்குண்டார்கள். விழுந்தவர்கள் போக மற்றவர்கள் ஓடினார்கள். விழுந்தெழுந்தவர்களும் அவர்களைப் பின்பற்றி ஓடி மறைந்தார்கள்.

இத்தனையும் கண்மூடித் திறக்குமுன் நடந்துவிட்டன. கூண்டுவண்டியின் அருகே இப்போது யாரும் இல்லை. வண்டியோட்டி மட்டுமே நின்றான். அவன் களத்திலிருந்து கூண்டை விட்டு விட்டு ஓட முடியாதவனாயிருந்தான்.சீடர்களும் பட்டி மந்திரியும் நடப்பது இன்னது என்று அறியாமல் தொலைவிலேயே திகைத்து நின்றார்கள்.

வண்டிக்காரன் இந்தப் புதுமை வாய்ந்த ஆர்ப்பாட்டம் கண்டு கலக்கமடைந்தான்.பாரத வீரன் அவன் பக்கம் சென்றான்.

“எங்கே கூண்டிலிருக்கும் சிங்கத்தைத் திறந்துவிடு, ஒரு கை பார்க்கிறேன்!வீர கற்கியிடம் அது என்ன செய்யும், பார்ப்போம்!” என்று முழக்கி ஆர்ப்பரித்தான்.

வண்டிக்காரன் நடுநடுங்கினான்.ஆனால் அவன் கூண்டைத்

திறந்துவிடத் துணியவில்லை.

66

"அண்ணலே, இது உயிருள்ள சிங்கம். இத்தனை வீரர்கள் காவல் காத்தும், இரைபோடும் சமயத்தில், அது பலரைத் தாக்கிக் கொன்றிருக்கிறது. எங்கள் பிழைப்புக்காக நாங்கள் அதனுடன் காலங்கழிக்கிறோம். ஈட்டியும் வெடிப்படையும் தாங்கிய வீரர்கள்கூட அப்படித்தான். பணத்துக்காகவே அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அதனுடன் வருகிறார்கள். ஆகவே இந்தச் சிங்கத்துடன் விளையாட வேண்டாம். அது உங்களை மட்டுமல்ல. என்னையும், இந்த மாடுகளையும், உங்கள் கழுதைகளையும், சீடர்களையும் ஒருங்கே கொன்று தின்றுவிடும். பக்கத்திலுள்ள ஊர்களையும் அது போய் அழித்துவிடும்” என்று பாதி அச்சுறுத்தலாகவும், பாதி கெஞ்சலாகவும் அவன் பேசினான்.

பாரத வீரன் கெஞ்சுதலுக்கும் ணங்கவில்லை. அச்சுறுத்தலுக்கும் பணியவில்லை. “இந்தப் பசப்பெல்லாம் வேண்டாம் திறந்துவிடுகிறாயா, அல்லது உன்னைக் கொன்று, அதன்பின் திறக்கட்டுமா?” என்று வாளை ஓங்கினான்.