மருதூர் மாணிக்கம்
இப்போது
173
வண்டிக்காரன் வெடவெடவென்று நடுங்கினான். “என்னைக் கொல்லவேண்டாம், ஆண்டே! ஆவது ஆகட்டும், நான் திறந்துவிடுகிறேன்! ஆனால் இந்த மாடுகள் நான் பெருவிலை கொடுத்து அருமையாக வாங்கியவை. அவைதான் என் சொத்து. அவை போய்விட்டால் நான் வாழ முடியாது. அவற்றை மட்டும் தொலைவில் கொண்டு விட்டுவர இணக்கம் தாருங்கள்” என்று கெஞ்சினான்.
பாரத வீரன் அதற்கு இணங்கினான். “உனக்குக் கால் மணி நேரம் தருகிறேன். அதற்குள் வேண்டிய பாதுகாப்புச் செய்து விட்டு வா. ஆனால் கால் மணி நேரத்தில் வராவிட்டால், நானே பூட்டை உடைத்துக் கதவைத் திறந்துவிடுவேன்” என்றான்.
நிலைமை மிஞ்சிப்போவது கண்டு சீடர்கள் நடுங்கினர். வீர வாழ்வில் அவனைத் தாம் ஊக்கிவிட்டது மடத்தனம் என்று அவர்கள் இப்போது மனமார வருந்தினார்கள். அவர்கள் முகத்தில் அச்சமும் கவலையும் குடிகொண்டிருந்தன. மெல்ல மெல்ல அவர்கள் அவனை அணுகினர். அவன் மனத்தை மாற்றத் தம்மாலியன்ற மட்டும் முயன்றனர்.
"வீரத்தலைவரே, அந்தப் பொல்லாத சிங்கத்தினிடம் தங்கள் வீரத்தைக் காட்டவேண்டாம். உங்களுக்காக அல்லா விட்டாலும், எங்களுக்காகவாவது இந்த ஒரு செயலை விட்டு விடுங்கள். வண்டிக்காரன் திரும்பிவருமுன் நாம் போய் விடுவோம்” என்று அவர்கள் கண்ணீருடன் வேண்டிக்கொண்டார்கள்.
பாரத வீரன் சிரித்தான். “நீங்கள் என் சீடர்கள் நீங்கள் இவ்வளவு கோழைகளாயிருப்பதற்கு நான் வெட்கப்படுகிறேன். நீங்கள் வேண்டுமானால் உங்கள் உயிரைக் கொள்ளுங்கள். நான் வரமுடியாது" என்றான்.
காத்துக்
பட்டிமந்திரி அவர்கள் பின்னாலேயே நின்றான். அவன் கால் கைகள் நடுங்கின. ஆனால் அவன் மூளை நடுங்க வில்லை பாரத வீரனைத் தடுக்க அவன் தன் வாதத்திறமை முழுவதும் காட்டினான்.
"மன்னர் மன்னரே, தாங்கள் ஆறறிவுடைய மனிதர், ஆறறிவுடைய மனிதரையும் ஆளப்போகும் வீரர். இந்தச் சிங்கம் ஐந்தறிவுடைய விலங்கு. ஐந்தறிவுடைய விலங்குகளுக்குத்தான்