பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(174) ||.

அப்பாத்துரையம் - 39

அரசு. பாமரையே வீரர் போருக்கு அழைக்கமாட்டார்கள். இந்த விலங்குடன் போரிடுவது தங்கள் மதிப்புக்குத்தகுமா?” என்றான்.

அவன் வாதத்துக்கு எதிர்வாதம் கூற முடியாமல், பாரத வீரன் சிறிது தயங்கினான். ஆனால் பட்டியின் பழைய வாதமொன்று அவன் நினைவுக்கு வந்தது. “வீரத்தை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு அது வேண்டாம்" என்று அவன் இதற்குமுன் கூறியிருந்தான். அதையே பாரத வீரன் இப்போது பட்டி மந்திரிமீது திருப்பினான்.

66

"அறிவுடைய பாங்கரே! உம் அறிவை உம்முடனேயே வைத்துக்கொள்க! வீரத்தை என்னிடமே விட்டு விடலாம். அது போகட்டும். சிங்கம் வீரத்தில் மனிதரை விடக் குறைந்ததா, மேம்பட்டதா?” என்று கேட்டான்.

பட்டிமந்திரியின் வாய் முற்றிலும் அடைத்துவிட்டது. மனிதரைவிடச் சிங்கம் வீரத்தில் குறைந்தது தான் என்று கூற நா எழுந்தது. தன்நிலையும், சீடர்நிலையும் வீரர் நிலையும் பற்றிய எண்ணம் நாவை அடக்கிற்று. அத்துடன், 'எங்கே, சிங்கத்துடன் நீயே போட்டியிட்டுப்பார்' என்று அவன் கூறிவிட்டால் என்ன செய்வது? இந்த அச்சம் வேறு அவனைப் பிடுங்கித் தின்றது.

பாரத வீரன் துணிவு கண்டு, சீடர்கள் இப்போது அவனைக் கைவிட்டனர். அவரவர் உயிர்கள் அவரவர்களுக்கு வெல்லமா யிருந்தது. அதைக் காத்துக்கொள்ள அவர்கள் பரபரப்புடன் ஓடினர்.

சாலையின் மரங்களிலே அவர்கள் தத்தி ஏறினர். எவ்வளவு உயரமாக ஏறினாலும் அவர்களுக்கு அமைதி ஏற்படவில்லை. மேலும் மேலும் முடியுமட்டும் ஏறிக்கொண்டே இருந்தார்கள். பீதியால் உடல் படபடத்தது. எங்கே விழுந்து விடுவோமோ என்றும் அவர்கள் அஞ்சி அஞ்சிச் செத்தார்கள்.

ச்

பட்டிமந்திரியின் நிலை இப்போது இக்கட்டாயிற்று. அவன் உடல் பருத்த உடல். கை கால்களும் பருத்தவை. அவனுக்கு மரம் ஏறத் தெரியாது. தெரிந்திருந்தாலும் கழுதையை அவனால் மரத்தில் ஏற்ற முடியாது. அவனுக்கு உயிர் வெல்லமானாலும், கழுதைக்குட்டி வெல்லத்தைவிட அருமையான கற்கண்டா யிருந்தது. அதை விட்டுவிட்டுச் செல்ல அவன் தயங்கினான்.