மருதூர் மாணிக்கம்
66
"நான்
சிங்கத்துடன்
179
பழகியவன். மேலிருந்தே எல்லாவற்றையும் நான் கவனித்தேன். அதற்கு முன்காலேகை அது முன்காலை மூன்று தடவை நெற்றியில் வைத்துத் தடவிக் காட்டிற்று. இதுவே அதன் வணக்கம். வால் சுழற்றிற்று. இது நட்பறிவிப்பு. தலை தாழ்த்தி உறுமிற்று. மண்டியிட்டது. இது அதன் பணிவான வேண்டுகோளைக் குறிக்கிறது. இறுதியில் நாலு திசையும் கேட்க முழக்கமிட்டது. இதுவே தங்கள் வெற்றியைப் புகழ்ந்து வாழ்த்திய அதன் வாழ்த்தொலி.
66
"இவ்வளவுக்கும் நான் சான்றாயிருக்கிறேன். உலகெங்கும் என்சார்பில் நானே தெரிவிப்பேன். தவிர, இந்தச் சிங்கத்துக்கு உரியவனும், அதன் பிரதிநிதியும் நானே. அம்முறையில் நானே உங்கள் சீடர் அனைவர் முன்னிலையிலும், சிங்கத்தின் சார்பில் வணக்கம் தெரிவிப்பேன். வெற்றிப் புகழ் பாடுவேன். உலகெங்கும் அதைப் பரப்ப உறுதி கூறுவேன்.
“ஆகவே சிங்கத்தைப் பாதுகாப்புடன் செல்ல இணக்கம் அளிக்கும்படி மீண்டும் கோருகிறேன். கூண்டை அடைக்கவும், இறங்கி வந்து பூட்டவும் கட்டளை பிறப்பிக்கத் திருவுளம் கூறவேண்டும்” என்று வண்டியோட்டி வேண்டினான்.
பாரத வீரன் ஈட்டியை நிலத்தில் ஊன்றினான். சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்தபின், “அப்படியே ஆகட்டும்!” என்று இணக்கம் அளித்தான்.
வண்டியோட்டி ஈட்டியாலேயே கதவைச் சாத்தினான். சரேலென்று இறங்கினான். கண்மூடித் திறக்குமுன் பூட்டுகளை இட்டான். பின் பரபரப்புடன் இருப்புச் சட்டங்களையும் ஒவ்வொன்றாக மாட்டிப் பூட்டினான். அவன் தன் காளைகளை மீட்டு வந்தான். இதற்குள் சீடர்கள் ஒவ்வொருவராக இறங்கி வந்தார்கள். பாரத வீரனை மகிழ்ச்சியுடன் தனித்தனியாக ஆரத்தழுவிப் பாராட்டினார்கள். வாய் கொள்ளாது அவன் வீரத்தைப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.
தன் கழுதையுடனும் பாரதவீரன் கோவேறு கழுதை யுடனும் பட்டி மந்திரி திரும்பி வந்தான்.பாரத வீரன் காலடியைப் பற்றிக் கொண்டு, அவன் அழுதான். ஆனால் அந்த அழுகையில் மகிழ்ச்சியும் இன்பமுமே கண்ணீராய் ஓடின.