பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

181

திருக்கிறது. சிங்கத்துடன் நான் பழகியவன். அதன் மொழி அறிந்தவன். அம்முறையில் அது உறுமியும் முழங்கியும் தெரிவித்ததை, நான் தமிழில் மொழி பெயர்த்துக் கூற விரும்புகிறேன். சிங்கத்தின் வாயுரையாக அவற்றைக் கொள்ளக் கோருகிறேன்.”

சிங்கத்தின் வாய்மொழியாக வண்டியோட்டி இப்போது

பேசினான்.

"சிங்கங்களுக்குள்ளே நான் இதுவரை எவருக்கும் அடங்காத சிங்கமாய் இருந்து வந்திருக்கிறேன். மிகுந்த அழிவு செய்திருக்கிறேன். அடங்காத சிங்கம் என்ற முறையில், என்னை இதுவரை எல்லாரும் “அடல் ஏறு” என்று அழைத்து வந்தார்கள். ஆனால் இன்று பாரத வீரன்முன் அடங்கி மடங்கிவிட்டேன். இதுமுதல் என் பெயர் ‘மடங்கல்' என்று குறிக்கப்படட்டும்.

"

"தமிழ் நாட்டு முன்னோர்கள் முன்னறிவிற் சிறந்தவர்கள், பாரத வீரன் வெற்றியை அவர்கள் முன்பே அறிந்திருக்கிறார்கள். என் தோல்வியையும் அறிந்திருக்கிறார்கள். என் தோல்வியை என் இனத்தின் தோல்வியாக அவர்கள் மதித்திருக்க வேண்டும். அதனால்தான் தமிழ் நிகண்டாசிரியர்கள், அகர வரிசை ஆசிரியர்கள், சிங்கத்தின் இனப்பெயர்களுள், மடங்கல் என்ற என் பெயரையும் குறித்திருக்கிறார்கள். தமிழ் முன்னோர் எழுதிவைத்த சான்றுடன், நான் இப்போது என் சான்றையும் அளிக்கிறேன்.

"இன்று முதல் ‘மடங்கல்' என்ற புதுப் பெயருடனே தான் நான் எங்கும் உலவுவேன். அந்தப் பெயருடன் பாரதவீரன் புகழை எங்கும் பரப்புவேன். 'சிங்கத்தை வென்ற வீரசிங்கம்' என்ற விருதுப் பெயருடன், அவர் வெற்றிகளும் புகழும் ஓங்குக. வருங்காலத்தில் அவரும் அவர் மனதில் இடங்கொண்ட மங்கையரும், என் இனத்தவரால் தாங்கப்பட்ட சிங்காதானத்தில் அமர்வார்களாக!”

சிங்கத்தின் சார்பில் வண்டியோட்டி செய்த சொற்பொழிவு ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது. “வாழ்க, சிங்கம், வளர்க வண்டியோட்டியின் செல்வம்! வெல்க சிங்கத்தை வென்ற வீரசிங்கம்” என்ற குரல்கள் மங்கம்மாள் சாலை அதிர முழங்கின.