பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. அணைகரையாறு

பாரத வீரன் சீடர்களில் சிலர் சிங்கக் கூண்டின் காவலர்களாகச் சென்றுவிட்டனர். சீடர்கள் தொகை இதனால் குறைவுற்றது. ஆனால் ஊர்வலத்தின் மதிப்பு இக்காரணத்தால் குறைந்துவிடவில்லை. ஏனென்றால் பாரத வீரன் புதுப்புகழ் அவனுக்கு முன்னே சென்றது. வழியிலுள்ள சிற்றூர்களிலும் குப்பங்களிலும் மக்கள் திரண்டு வந்தனர். சிங்கத்தை வென்ற வீரசிங்கத்தைக் காண அவர்கள் துடித்தனர். அவ்விடங்களி லிருந்து சிறுவர் சிறுமியர் நெடுந்தொலை அவர்களைப் பின்பற்றிச் சென்றனர். சீடர்களின் வாழ்த்தொலிகளில் அவர்களும் பலபடியாகக் கலந்துகொண்டார்கள்.

பல ஊர்களில் செல்வர்களும் பெரிய மனிதர்களும் சேர்ந்த விருந்தளித்தனர். அச்சமயம் ஆடவர் இளவரசியைப் பற்றிப் பாரத வீரனைப் பேசவைப்பார்கள். அவன் வீரத்தைத் தூண்டி நாடகக் காட்சிகள் நடிக்க வைப்பார்கள். அதேசமயம் பெண்டிர் பட்டி மந்திரியிடம் பேச்சுக் கொடுப்பார்கள். அவன் பெண்டு பிள்ளைகளைப் பற்றி விசாரிப்பார்கள். அவன் ஒரு தீவுக்கு அரசனாவதைக் கேள்விப்பட்டு, அவர்களில் சிலர் வியப்படைந்தனர். அது பற்றி அவனைக் கிளறினர். அவன் அறிவார்ந்த மறுமொழி கேட்டு, அவர்கள் வியப்பு இன்னும் அதிகமாயிற்று.

66

‘அரசனானால், உனக்கு ஆளத் தெரியுமா?” என்று ஓர் இளம்பெண் கேட்டாள்.

“என்ன சொன்னீர்கள் அம்மா! எனக்கா ஆளத் தெரியாது? என் வீட்டுக்கு வந்து பார்க்க வேண்டும். எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள். நான் இல்லாத சமயம் அவள் வேலையே பார்க்கமாட்டாள். ஆனால் நான் இருக்கும்போது அவளைப்