(184) ||.
அப்பாத்துரையம் - 39
பம்பரமாய் ஆட்டுவேன். அவள் பரபரப்புடன் வேலை செய்வாள். எனக்கு மூன்று புதல்வியர், இரண்டு புதல்வர் இருக்கிறார்கள். நான் ல்லாவிட்டால், அவர்கள் டைவிடாமல் சச்சரவிடுவார்கள். நான் இருக்கும்போது ஒருவருக்கொருவர் போட்டியிட்டு என் கட்டளைகளை நிறைவேற்றுவார்கள்.
"வீட்டை இப்படி ஆளத் தெரிந்தவனுக்கு, நாட்டை ஆள்வதா ஒரு பெரிய காரியம்? ஆறு பேரை ஆளும் திறமை இருந்துவிட்டால் போதும், அதன்பின் ஆறாயிரம் பேரை ஆள்வதும், ஆறு கோடிப் பேரை ஆள்வதும் தானாக வந்துவிடும். ஏனெனில் முதல் ஆறுபேர் ஆளுக்கு ஆறு பேரை ஆள்வர். அவர்கள் தாமும் ஆளுக்கு ஆறு பேரை ஆள்வர். இப்படி ஆட்சித் திறமை பரவிவிடும்.”
"இவரிடம் ஆறு நாள் பாடம் கேட்டால் போதும். நம் போன்ற பெண்கள்கூட நாட்டை ஆண்டுவிடலாமே" என்று அந்தப் பெண் தன் தோழியருடன் அளவளாவிப் பேசிக் கொண்டாள்.
ஆரவாரம் உலாவை ஊர்வலாமாக்கியிருந்தது. விருந்துகளும் நடிப்புக் கச்சேரிகளும் பேச்சுக்கச்சேரிகளும் அதை ஓர் ஊர் சுற்றும் திருவிழா ஆகியிருந்தன. இதனால் அணைகரை செல்லுமுன் பொழுது இருட்டிவிட்டது ஆற்றின் இப்புறமே அவர்கள் தாவளமடித்தனர்.
அவர்கள் தங்கிய இடத்தில் ஒருவழிப்போக்கர் விடுதி இருந்தது. விடுதிக்காரர் செந்தில் வேலர் ஒரு சிறந்த பக்தர், பெருஞ்செல்வவான். ஈகைப் பண்பும், நகைச்சுவையும் அவரிடம் ஒருங்கே இணைந்திருந்தன. பாரத வீரனிடமும் பட்டி மந்திரியிடமும் அவருக்குப் பெரும் பாசம் உண்டாயிற்று. அவர்களுக்கும் சீடர்களுக்கும் அவர் நல்ல விருந்தளித்தார். அவர்கள் வீரப் புகழ்ப்பாடலையும் கூத்து கும்மாளங்களையும் அவர் இரவு பத்துமணி வரை கண்டு களித்தார். அதன்பின் அனைவரும் உறங்கிவிட்டனர்.
முன்னிரவில் சிறுதூறல் இருந்தது. ஆனால் அது சிறிது நேரத்தில் ஓய்ந்துவிட்டது. அதை அவர்கள் பொருட்படுத்த வில்லை. அவர்கள் கூத்து கும்மாளங்களை அது நிறுத்திவிடவும்