பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

185

இல்லை. அதே தூறல் மலைப்பகுதியில் பெருமழையாயிருக்கக் கூடும் என்று அவர்கள் கருதவில்லை. மறுநாள் காலை அணைகரை ஆற்றை அணுகியபோதுதான் அவர்கள் அந்த உண்மையை உணர்ந்தனர். ஆறு இரு கரையும் புரண்டோடிற்று. முடிப்பதற்குள் வெள்ளம் போய் விடுமென்று அவர்கள் கருதினார்கள். ஆனால் இங்கும் அவர்கள் ஏமாந்தார்கள். வெள்ளம் மிகுதியாகப் பெருகி வந்தது. குறையவில்லை.

காலையுண்டி

அணைகரை ஒரு கானாறு. அதில் ஆண்டில் நான்கைந்து நாட்களுக்குமேல் கரண்டையளவு தண்ணீர்கூட இராது. ஆனால் தண்ணீர் வரும் சமயம் அதில் ஆளும் நிலை கொள்ளாது. ஆனையும் நிலை கொள்ளாது. நீரோட்டமும் சுழிகளும் சிறுமலைகளை அடித்திழுத்துச் செல்லத் தக்கவையாயிருந்தன. இச்சமயங்களில் ஆற்றில் யாரும் இறங்கவும் மாட்டார்கள். படகு தெப்பங்களையும் யாரும் பயன்படுத்துவ தில்லை.

இச்செய்திகளை

விடுதி முதல்வர் விளக்கினார். இரண்டொரு நாள் தங்கி, ஆற்றைக் கடக்கும்படி வேண்டினார்.

சீடர்களுக்கு இது விருப்பமே. ஆனால் பாரத வீரன் இதற்கு

இணங்கவில்லை. சிங்கத்தினிடமே காட்டிய வீரத்தை அவன் அணைகரையாற்றினிடமும் காட்டத்துணிந்தான். எவர் கருத்துரையையும் கேளாமல், எவர் மறு மொழிக்கும் காத் திராமலே அவன் தன் கோவேறு கழுதையுடன் ஆற்றில் இறங்கினான்.

சீடர்கள் அனைவரும் திகைத்து நின்றார்கள். ஆனால் முத்துக்குடும்பன் பாரத வீரனைப் பின்பற்றி ஆற்றில் இறங்கினான். அவன் பின் மாவிதுரன் இறங்கினான். தத்தம் வீரத்தின் ஏற்றத் தாழ்வுக்கேற்ப, அனைவரும் முன்பின்னாக நீரில் கால்வைத்தனர். தன் கழுதையுடன் பட்டி மந்திரி எல்லார்க்கும் பின்னாலேயே ஆற்றில் இறங்கினான். எல்லாருக்கும் பாதுகாப்பாக முத்துக் குடும்பன் ஒரு கட்டளை பிறப்பித்தான். ஒவ்வொருவரும் முன்னுள்ளவர் கையையும் பின்னுள்ளவர் கையையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்படி கூறினான்.