பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




186

||--

அப்பாத்துரையம் - 39

எல்லாருக்கும் முன் சென்றவன் பாரத வீரன். அவன் கோவேறு கழுதையை முன்னே செல்லவிட்டு, அதன் கடிவாளத்தைப் பற்றிக் கொண்டான். எல்லாருக்கும் பின்னே சென்றவன் பட்டி மந்திரி. அவன் தன் கழுதையைப் பின்னே செல்ல விட்டு அதன் தலைவரைப் பற்றியிழுத்துச் சென்றான். இங்ஙனமாக, அனை வரும் ஒன்றுபட்டு நின்று, அணைகரையாற்றுடன் போர் தொடுத்தார்கள்.

கவசத்தின் பளு

பாரதவீரனுக்கு

தொடக்கத்தில் உதவியாயிருந்தது. ஆற்றின் எதிர்ப்பைத் தாங்கி அவன் எல்லாரையும் இழுத்துச் சென்றான். ஆனால் வேதாள் அட்டையுடன் பிணிக்கப்பட்டிருந்த கோவேறு கழுதையே இழுப்புக்கு மிகப் பெரிதும் ஆளாயிற்று. நடு ஆறு செல்வதற்குள் எவருக்கும் ஆழம் நிலைகொள்ளவில்லை. இப்போது நிலைமை தலைகீழாயிற்று. பளுவால் பாரத வீரன் நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தான். ஆனால் அப்போதும் அவன் பிறரை ஊக்கினானேயல்லால், பிறர் உதவி கோரவில்லை. இப் பெருந்தன்மை சீடர் உள்ளத்தை உருக்கிற்று. முத்துக்குடும்பன் கட்டளைப்படி அவர்கள் அவனைச் சூழ்ந்து நின்று தாங்கினர். இதனால் அவனை அமிழாமல் காக்க முடிந்தது. ஆனால் ஆற்றின் வேகத்தில் அனைவரும் வண்டல் போல மிதந்து செல்லவேண்டியதாயிற்று. ஆற்றின் நடு இழுப்பில், அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்து அரைக் கல் தொலைவுக்கு மேல் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு விட்டனர். அணைகரையின் அக்கரை செல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவர்களில் பலர் இழந்து விட்டனர்.

பாரத வீரன் இல்லாவிட்டால் சீடர்கள் அக்கரை சென்றிருப்பார்கள். இது பாரத வீரனுக்குத் தெரியும். தன்னுடன் அவர்களும் வீணாக அழிவதை அவன் விரும்பவில்லை. ஆகவே தன்னை விட்டுவிட்டுப் போகும்படி அவர்களை நயமாகத் தூண்டினான். “கழுதைகளுடன் நீங்கள் எதிர்கரை சென்று விடுங்கள். நான் எதிர் நீச்சலடித்து, ஆற்றை ஒரு கை பார்த்து

டுகிறேன்” என்றான். அவன் பெருந்தன்மை அவர்களுக்குப் புத்தெழுச்சி தந்தது. "உங்களுடனேயே எதிர்கரை சென்று விடுவோம்" என்று கூறி, அவர்கள் முழுமூச்சாக நீரோட்டத்