மருதூர் மாணிக்கம்
189
பற்றிக் கவலைப்பட்ட, அவன் போகக் காரணமாய்விட்டோமே என்று பாரத வீரன் வருந்தினான்.
னி
ஓடி ஓடி நீலகண்டன் கால் ஓய்ந்துவிட்டது. இனி ஓட முடியாது என்ற நிலை ஆயிற்று. நீந்தி நீந்திக் கோவேறு கழுதைக்கும் நாடிநரம்பு தளர்ந்துவிட்டது. அது நீரில் மிதந்தே சென்றது. ஆனால் இச்சமயம் ஆற்றின் கரையிலிருந்த ஒரு மரம் ஆற்றினுள் விழுந்து கிடந்தது. அது கப்பும் கவருமாயிருந்ததால், நீரில் இழுபடவும் இல்லை. அமிழவும் இல்லை. கரையிலிருந்து ஆற்றின் பாதி அகலம்வரை அது ஒரு மிதவைப் பாலம் போல் கிடந்தது. அதன் கிளைகளில் கோவேறு கழுதையின் உடல் தட்டி மேற்செல்லாமல் நின்றது.
நீலகண்டனுக்குப் புது நம்பிக்கை பிறந்தது. உடலில் புதுத்தெம்பு வந்தது. அவன் மரத்தின் வழியாக நடுஆறுவரைச் சென்றான். கோவேறு கழுதையின் கயிற்றைப் பற்றினான். நீர் வழியாக அதைக் கரைக்கு இழுத்து வந்து கரை சேர்த்தான்.
நீர் குடித்து அதன் உடல் ஊதியிருந்தது. தலையைப் பள்ளத்திலும் உடலை மேட்டிலும் இட்டு, அவன் அதை உருட்டினான். போதிய அளவு நீர் கக்கியபின், அதைச் சுள்ளிகளின்மேல் படுக்கவைத்தான். சருகு கூளங்களைக் கிளறினான். மேற்கூளம் அகற்றி, நனையாத அடிக்கூளம் திரட்டினான். அதன் புகையால் அவன் கோவேறு கழுதையின் உடம்பை வெதும்பினான். அது உணர்வுபெற்ற பின், இளங்குளையுணவூட்டி அதற்கு வலுவூட்டினான்.
பாரத வீரன் அவனைத் தேடி இரு சீடர்களை அனுப்பியிருந்தான், நீலகண்டனுடன் கோவேறு கழுதையையும் கண்டு அவர்கள் அகமகிழ்வெய்தினர். மீண்டும் எல்லாரும் ஒருங்கு கூடினர்.
அவர்கள் கொண்டுவந்த உணவெல்லாம் வெள்ளத்தில் கரைந்து போயிற்று. ஆயினும் நெருப்புப் பெட்டி இருந்ததால், அவர்கள் காய்கனிகளைப் பறித்துச் சமைத்து உண்டனர்.
அன்றையப் பொழுதையும் இரவையும் அவர்கள் ஒரு பெரு
மரத்தடியில் கழித்தனர்.