192
அப்பாத்துரையம் - 39
சீடர்கள் பச்சைப் புகழ்ச்சியைவிட, பணிவார்ந்த இந்தக் கேள்வி பாரத வீரனுக்குக் களிப்பூட்டிற்று. அவன் அகக் கனிவுடனே பேசினான்.
“ஒப்பற்ற துணைவனே! தாராளமாகக் கேள். என் புகழுடன் ஒட்டி வாழப்போகிறவன் நீ. உன் சந்தேகங்களைத் தீர்ப்பது என் கடமை. அது என் உரிமையும் ஆகும்” என்றான் அவன்.
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தக் காடுகள் முழுவதுமே அந்தக் காலத்தில் அரக்கர்கள், பூதங்கள், தேவர்கள், முனிவர்கள் நிறைந்ததாகத் தோற்றுகிறது. அவர்களெல்லாம் இப்போது எங்கே போனார்கள்.”
பாரத வீரன் புன்முறுவல் பூத்தான்.
66
“அந்தக் காலத்தில் மட்டுமென்ன? இந்தக் காலத்திலும் தான் இருக்கிறார்கள். என் நூலகத்தை ஒரு பூதம் தூக்கிக் கொண்டு போயிற்று. அதில் என் ஏடுகள் எல்லாம் இருந்தன. இதை நீ அறியமாட்டாய். இது நீ வருமுன் நடந்தது. என் அத்தையும் வேறு இரண்டு நண்பர்களும் அதைக் கண்ணாரக் கண்டார்கள். வேறு யாராவது கண்டதாகச் சொன்னால்கூட நான் எளிதாக நம்பமாட்டேன். அவர்களுக்குத் தெய்வங்கள், பூதங்கள் எவற்றிலும் நம்பிக்கை கிடையாது. அப்படிப் பட்டவர்களே பார்த்து என்னிடம் கூறினார்கள். அது மட்டுமல்ல, நானே ஓரளவு கண்டேன். முந்தின நாள் அங்கு இருந்த புத்தகங்கள் மட்டுமல்லாமல், அறையையே காணவில்லை. பூதத்தைத் தவிர வேறு யார் அறையைத் தூக்கி கொண்டு போக முடியும்?"
“அப்படியா செய்தி? நம் சீடர்கள் இதுபற்றி என்னிடம் எப்படி எப்படியோ சொன்னார்கள். அவர்கள் சொன்னதை எல்லாம் நம்ப முடியவில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் போது.."
"சொல்லும் ஆளைக்கொண்டு எதையும் நம்பாதே, பட்டி. செய்தியைக் கண்டுதான் மதித்தறிய வேண்டும்."
'ஆம்,ஆண்டே.அதனால்தான் உங்களிடம்கூடச் சந்தேகம் கேட்க முடிகிறது. இல்லாவிட்டால், என் போன்றவர் எங்கே?