பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

193

நீங்கள் எங்கே? அந்தப் பூதத்துக்கு நீங்கள் எப்படியோ, அப்படித் தானே உங்களுக்கு நான் இருக்க முடியும்?'

66

'நீ கூறுவது முற்றிலும் சரியல்ல,பட்டி! அந்தப் பூதம் என்னைவிட உருவத்தில் பெரிதாயிருக்கலாம். மாயத்தில் பெரிதாயிருக்கலாம். ஆனால் அந்த மாதிரிப் பூதங்களையும் அரக்கர்களையும் கொல்லவே நான் கற்கியாய்ப் பிறந்திருக் கிறேன். இராவணன், சராசந்தன், இடும்பன், கவந்தன் முதலிய அரக்கர்கள் பலரும் என் கையால் சாவதை நீயே பார்க்கப் போகிறாய். அதை முன்கூட்டி அறிந்ததனால்தான், எனக்குத் தொல்லை கொடுக்க அவர்கள் பூதத்தை அனுப்பியிருக் கிறார்கள்.”

"மன்னிக்க வேண்டும், ஆண்டே! எனக்கு அவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனாலும் இராவணனை இராமா யணத்தில் இராமர் கொன்றுவிட்டார் என்று கேள்விப்படு கிறேன். சராசந்தனைக்கூட யார் யாரோ கொன்றுவிட்டதாக நினைவிருக்கிறது. அவர்கள் இப்போது உங்களுக்கு எப்படித் தொல்லை தரமுடியும்?”

இப்போது பாரத வீரன் நிமிர்ந்து மீசையை முறுக்கினான். பட்டி மந்திரி திடீரென்று அச்சமடைந்து நடுங்கினான். ஆனால் பாரத வீரன் தொனியில் தான் மாறுபாடு இருந்தது. பேச்சில் மாறுபாடு இல்லை.

"பட்டி! நீ ஏதேதோ கேள்விப்பட்டிருக்கிறாய்.யார் யாரோ சொல்லியிருக்கிறார்கள். நீ ஆராய்ச்சியுடன் படிக்கவும் இல்லை. ஆராய்ச்சியுடையவர் சொல்லிக் கேட்கவும் இல்லை. இப்போது நான் விளக்குகிறேன். கேள்! இராமனாக அவதாரம் எடுத்த கடவுள் திரும்பவும் கண்ணனாக அவதாரம் எடுத்தார். இது உனக்குத் தெரியுமல்லவா?

“ஆம்!”

"அதுபோல இராவணன், சராசந்தன், சிசுபாலன் எல்லாருமே திரும்பத் திரும்ப அவதாரம் எடுப்பார்கள். திரும்பத் திரும்பக் கடவுள் அவதாரம் எடுத்து வந்து அவர்களை அழிப்பார்.”

"