(194
66
அப்பாத்துரையம் - 39
அப்படியா? சரி, சரி! ஆனால் இரண்டு பக்கமும் அவதாரம் எடுத்துக்கொண்டு போனால், திரும்பத் திரும்ப அழித்து என்ன பலன்?”
66
அப்படிக் கேள். கடவுள் அவதாரங்களில் கடைசி அவதாரம் கற்கி, அதுதான் நான். என் கையால் இறக்கும் எல்லாப் பூதங்களும், அரக்கர்களும் அதுபோலக் கடைசி அவதாரங்கள் தான். எனக்குப் பின்னால் பூதங்கள், அரக்கர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களை நான் அழித்துவிடுவேன். நானும் இனிமேல் அவதாரம் எடுக்க மாட்டேன்!”
“எனக்கு இனி அவதாரம் இருக்குமா, ஆண்டே!'
பாரத வீரன் பதில் எதுவும் கூறவில்லை. பட்டி மந்திரி அவனை ஏறிட்டுப் பார்த்தான். அவன் முகம் முற்றிலும் மாறுபட்டுவிட்டது. அவன் எதையோ கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
பட்டி மந்திரிக்கு இப்போது அச்சமாயிருந்தது. அவன் கழுதையை நிறுத்தி, பாரத வீரன் பின்சென்று பதுங்கினான். என்ன நேரப் போகிறதோ என்று நடுங்கினான்.
“அதோ நான் சொன்னது சரியாயிற்று, பார்! கவந்தன் என்ற அரக்கனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அவன் அதோ நம்மை நோக்கி குதிக்கிறான் பார்” என்றான் பாரத வீரன்.
"ய...? கவ...தனா?"
பட்டி மந்திரிக்கு நாடிநரம்புகள் முற்றிலும் தளர்ந்தன.வீரன் நோக்கிய இடத்தில் அவன் கூர்ந்து நோக்கினான். எதுவும் காணவில்லை.
66
'அதோ இரண்டு கைகளும் இரண்டு பனையளவு நீண்டிருக்கின்றன. இரண்டு கைகளிலும் எவ்வளவு பெரிய பாறைகளை ஏந்திக்கொண்டிருக்கிறான் பார்? அதுதான் கவந்தன். நீ இப்போது இங்கேயே நில். நான் சென்று அவன் கொட்டத்தை அடக்கி வருகிறேன்" என்று கூறிப் பாரத வீரன் முன்னால் விரைந்தான்.
பட்டி மந்திரி கண்களுக்கு இரண்டு ஏற்றங்கள் தான் தெரிந்தன. அவை பனையளவு நீளம் இருந்தது. உண்மைதான்.